கொவிட் மரணங்களை அறிவிக்க புதிய திட்டம் - சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்

Published By: Digital Desk 4

14 Jun, 2021 | 09:26 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் ஏற்கனவே இடம்பெற்ற மரணங்களுடன் இணைந்து கொவிட் மரணங்களின் எண்ணிக்கையை நாளாந்தம் அறிவித்து வந்தோம்.

எனினும் இனிவரும் நாட்களில் கடந்த 48 மணித்தியாலங்களுக்குள் அல்லது 24 மணித்தியாலங்களுக்குள் பதிவாகும் சகல மரணங்களையும் அறிவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.

Articles Tagged Under: Asela Gunawardena | Virakesari.lk

பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் பதிவான மரணங்கள் கூட கடந்த வாரமே அறிவிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறா நிலைமை பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில் இன்று திங்கட்கிழமை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டது.

இதேவேளை இன்று திங்கட்கிழமை 67 கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டன. இவை கடந்த சனிக்கிழமை பதிவானவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 2203 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இன்று திங்கட்கிழமை 2,259 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.

அதற்கமைய நாட்டில் 225 897 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இவர்களில் 188 547 பேர் தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளதோடு , 34 735 தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெடுக்குநாறிமலை கைது விவகாரம் -நாடாளுமன்றத்தில் தமிழ்...

2024-03-19 11:11:26
news-image

கெஹலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றில் ஆஜராக்கியபோது பயன்படுத்திய...

2024-03-19 11:08:51
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து ;...

2024-03-19 10:52:08
news-image

ஒருவர் தீவைத்துக் கொலை: எல்ல பொலிஸாரால்...

2024-03-19 10:28:29
news-image

ஊதா நிற இலை வடிவ முகம்...

2024-03-19 10:39:58
news-image

முதலில் ஜனாதிபதி தேர்தல் - அமைச்சர்களிடம்...

2024-03-19 09:54:32
news-image

அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்!

2024-03-19 10:01:21
news-image

மன்னாரில் பனங்காட்டுக்குள் பரவிய தீயினால் வீடு...

2024-03-19 09:45:20
news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18