எரிபொருள் விலை அதிகரிப்பை அரசாங்கம் உடனடியாக வாபஸ் பெறவேண்டும் - நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பு

Published By: Digital Desk 3

14 Jun, 2021 | 09:09 AM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

எரிபொருள் விலை அதிகரிப்பால் அத்தியாவசிய பொருட்களின் விலை அதகரிக்கப்படுவதை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. அதனால் அரசாங்கம் எரிபொருள் விலை அதிகரிப்பை உடனடியாக வாபஸ் பெற்றுக்கொள்ளவேண்டும் என நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பு தெரிவிள்ளது

எரிபொருள் விலை அதிகரிப்பால் நுகர்வோர் பாதிக்கப்படுவது தொடர்பில் அதன் தலைவர் ரன்ஜித் விதானகே விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்படுள்ளதாவது,

மக்கள் மூன்றுவேளை உணவுக்கு வழியில்லாமல் கஷ்டத்தில் இருக்கும் நிலையில் அரசாங்கம் எரிபொருட்களின் விலையை அதிகரித்திருக்கின்றது. இதனால் மக்கள் மேலும் தாங்க முடியாத பொருளாதார பிரச்சினைக்கு முகம்கொடுக்க நேரிட்டிருக்கின்றனர்.

கொவிட் காரணமாக மக்கள் தொழிலுக்கு செல்ல முடியாது வீடுகளில் அடைப்பட்டிருக்கும் நிலையில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வாகனங்கள் ஊடாக வீடுகளுக்கு கொண்டுவந்து தரப்படுகின்றன.

தற்போது எரிபொருள் விலை அதிகரித்திருப்பதால், அந்த வாகன உரிமையாளர்கள் தங்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை நுகர்வோரிடமிருந்துதான் பெற்றுக்கொள்வார்கள். அதனால் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கப்படுவதை தவிர்க்க முடியாத நிலை ஏற்படும். இதுதொடர்பாக அரசாங்கம் விரைவாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அத்துடன் கடந்த  அரசாங்க காலத்தில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டபோது, தற்போதைய அரசாங்கம் எதிர்க்கட்சியில் இருந்து, பாராளுமன்றத்துக்கு மிதி வண்டியிலும் மாட்டு வண்டியிலும்  சென்றார்கள்.

அதேபோன்று தற்போதைய அமைச்சர் உதய கம்மன்பில, பெற்றோல் 90ரூபாவுக்கு விற்கமுடியும் என்றே அன்று தெரிவித்தார். ஆனால் தற்போது 157ரூபாவரை அதிகரித்திருக்கின்றார். விலை அதிகரிப்பது அல்ல பிரச்சினை, தற்போதைய நிலையில் விலை அதிகரிப்பை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

மேலும் கொவிட் காரணமாக வருமானம் இல்லாமல் சென்றுள்ளதுடன் செலவு அதிகரித்திருக்கின்றது. தங்கள் பிள்ளையின் இணைய வழி கல்வி நடவடிக்கைக்கு செலவழிக்க முடியாத நிலையில் மக்கள் இருக்கும்போது எரிபொருட்களின் விலையை அதிகரித்திருப்பது,

மனிதாபிமானமே இல்லாத செயலாகும். என்றாலும் நாடு பொருளாதார ரீதியில் வீழ்ந்துள்ள நிலையிலும் அமைச்சர்களுக்கான  வரப்பிரசாதங்களில் எதனையும் குறைக்கவில்லை. அன்றுபோலே இன்றும் தீர்வையற்ற வாகனங்கள் இறக்குமதி செய்கின்றார்கள். சம்பளம் பெறுகின்றார்கள். அனைத்து கொடுப்பனவுகளையும் பெறுகின்றார்கள்.

அத்துடன் எரிபொருட்களின் விலை அதிகரிப்பால் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படுவதை யாராலும் தடுக்க முடியாது. இன்னும் சில தினங்களில் பேக்கரி உற்பத்திகளின் விலை அதிகரிக்கும்.

பஸ் கட்டணம் அதிகரிக்கும் அதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்பாட்டுக்குள் வைப்பதாக இருந்தால் எரிபொருட்களின் விலையை கட்டுப்படுத்திக்கொள்ளவேண்டும்.  எனவே அரசாங்கம் உடனடியாக எரிபொருள் விலை அதிகரிப்பை வாபஸ் பெற்றுக்கொள்ளவேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காத்தான்குடி பாலமுனை கடற்கரையில் பெண் ஒருவரின்...

2024-04-18 15:52:14
news-image

பிட்டிகல பகுதியில் துப்பாக்கிச் சூடு ;...

2024-04-18 15:42:00
news-image

'டைம்' சஞ்சிகையின் ஆளுமை மிக்க 100...

2024-04-18 15:23:39
news-image

இலங்கையில் அதிகளவில் மரணங்கள் ஏற்பட்டமைக்கு காரணம்...

2024-04-18 15:43:57
news-image

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளரின் இடமாற்றத்தை...

2024-04-18 15:29:41
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:55:25
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52