மீன் வியாபார பயண அனுமதியை பயன்படுத்தி மதுபானம் கடத்தியவர் கைது 

Published By: Digital Desk 4

14 Jun, 2021 | 06:38 AM
image

முல்லைத்தீவு நகர் பகுதியில் மீன் ஏற்றி செல்லும் வாகனத்தில் 250 கால்போத்தல் மதுபான போத்தல்களை  சட்டவிரோதமாக கொண்டு சென்ற இளைஞர் ஒருவரை சிறப்பு அதிரடிப்படையினர் (13)கைதுசெய்துள்ளார்கள்.

வாகனங்களில் மீன்களை ஏற்றிசெல்வதற்கான பயண அனுமதிப்பத்திரத்தினை பயன்படுத்தி புதுக்குடியிருப்பில் இருந்து முல்லைத்தீவு நோக்கி செல்கையில் கரைச்சிக்குடியிருப்பு பகுதியில் வைத்து சிறப்பு அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

முள்ளியவளை நீராவிப்பிட்டி பகுதியினை சேர்ந்த 20 வயதுடைய  இளைஞனே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவர் பயணித்த வானமும் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளது.

நாளை குறித்த நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த முல்லைத்தீவு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.

பயண தடை விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் மதுபான சாலைகள் மூடப்பட்டடுள்ளதால் முல்லைத்தீவு நகரம் ,முள்ளியவளை , புதுக்குடியிருப்பு பகுதிகளில் மதுபான போத்தல்கள் 5000- 10000 ரூபா வரையில் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடதக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27