ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை இழந்தால் பெரிதும் பாதிக்கப்படபோவது மீனவர் சமூகமே..!: எம்.எ.சுமந்திரன்

Published By: J.G.Stephan

13 Jun, 2021 | 02:35 PM
image

(ஆர்.யசி)
ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை தடைசெய்யுமாறு பிரேரணையை ஐரோப்பிய பாராளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. அது விரைவில் நடைமுறைக்கு வரும். அவ்வாறான நிலையில் மீனவர் சமூகமே பாரிய அளவில் பாதிக்கப்படப்போவதாக  தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெருவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், இலங்கையின் மேற்கு கரையோரத்தில் மீன்பிடித்தல் தடை செய்யப்பட்டுள்ளது. கப்பலொன்றால் ஏற்பட்ட தாக்கம் மிக மோசமாக எமது நாட்டை பாதிக்கப்போகின்றது. இது பொருளாதார ரீதியில் பலவிதமான தாக்கங்களை ஏற்படுத்தப்போகின்றது. பாதிக்கப்பட்ட பகுதியில் மீனவர் குடும்பங்கள் தொழில் செய்ய முடியாத நிலையில் உள்ளனர். ஆழ்கடல் மீன்பிடிக்கு மட்டுமே  அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடுபவர்கள் சொற்ப அளவிலானவர்கள். இவ்வாறான நிலையில் மேற்கு கடற்கடை மீனவர்கள் அங்கு தொழில் செய்ய முடியாத நிலையில் அவர்களை வடக்கு கிழக்கு பகுதிகளில் தொழில் செய்ய விடுவதற்கான முயற்சிகள் நடைபெறக்கூடும்.

இந்த விடயத்தில் மீன்பிடித்துறை அமைச்சர் என்பவர் நாட்டினுடைய மீன்பிடித்துறை அமைச்சராக செயற்பட வேண்டும். நாட்டில் எந்தப்பகுதியில் மீனவர்களுக்கு இடர் ஏற்பட்டாலும் அவர் அதனை கவனிக்க வேண்டும். அதனை விடுத்து கப்பல் பிரச்சினை வந்திருப்பதன் காரணமாக வடகிழக்கு மீனவர்கள் வருவாயை கூட்டிக்கொள்ளலாம் என அவர் கூறுவது பொறுப்பற்ற ஒரு கூற்றாகும். அதுமட்டுமல்லாது எதிர்காலத்தில் வடகிழக்கு மீனவர்களையும் இது பாதிக்கும் வித்தல் அமையலாம். ஏனைய இடங்களில் தொழில் செய்ய முடியாதவர்கள் இங்கு வருவதற்கான நிலை உருவாகும். அதனை அவரே கொண்டுவந்து நிறுத்திவிடுவார். ஆகவே மீன்பிடித்துறை அமைச்சர் தமிழ் மக்களுக்கான அமைச்சர் என சொல்லிக்காட்டுவதும், அவ்வாறான ஒரு பிம்பத்தை ஏற்படுத்துவதும் தவறான ஒரு விடயமாகும்.

மேலும், ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை நீக்க வேண்டும் என்ற பிரேரணையை ஐரோப்பிய பாராளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. 2015 ஆம் ஆண்டு பயங்கரவாத தடுப்புச்சட்டம் அகற்றப்படுகின்றது என்ற வாக்குறுதியின் பெயரிலேயே ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை மீள வழங்கப்பட்டிருந்தது. இப்போது நான்கு ஆண்டுகள் கடந்தும் பயங்கரவாத தடுப்புச்சட்டம் நீக்கப்படாத காரணத்தினால் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை தடைசெய்யுமாறு கூறியுள்ளனர். அது விரைவில் நடைமுறைக்கு வரும். இதனால் பெரியளவில் பாதிக்கப்படப்போவதும் மீன் ஏற்றுமதியே  எனவும் அவர் கூறினார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27