சமூகமாக முகம் கொடுத்தலே ஒரே வழி

Published By: Digital Desk 2

13 Jun, 2021 | 03:00 PM
image

சி.அ.யோதிலிங்கம்

தமிழ்ப் பிரதேசங்களில் கொரோனா கொத்தணிப் பரவல் என்கின்ற நிலையிலிருந்து சமூகப் பரவல் என்ற நிலைக்கு மாறியுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டும் மூவாயிரத்து எழுநூறு பேர் வரை தொற்றுக்குள்ளாகி இருக்கிறனர். இதுவரை ஐம்பது பேர் வரையானோர் மரணமடைந்திருக்கின்றனர். 

   

இந்தக் கொரோனா தமிழ் மக்களின் சொத்தாக இருக்கும் கல்வியாளர்களையும் விட்டுவைக்கவில்லை. யாழ் பல்கலைக்கழக ஆங்கிலத்துறை விரிவுரையாளர் சிறீரஞ்சினி ஆனந்த குமாரசுவாமி கொரோனாவினால் மரணமடைந்திருக்கிறார். இவரது இழப்பு தமிழ் கல்வியுலகத்திற்கு மிகப் பெரும் இழப்பாகும். இவ்வாறான இழப்புக்களைத் தொடர்ந்தும் அனுமதிக்கப் போகிறோமா?

தமிழ்ப் பிரதேசங்களில் ஆரம்பகால விழிப்புநிலை தற்போதில்லை, ஆரம்ப காலங்களில் சுகாதாரப் பிரிவினர் மட்டுமல்ல மக்களும் விழிப்பு நிலையில் இருந்தனர். யாழ். மாவட்டத்தில் மதகுருவினால் கொரோனா கொத்தணி உருவான போது சுகாதாரப்பிரிவினருடன் மக்களும் இணைந்த சமூகப்பரவலாக வளராமல்  பார்த்துக் கொண்டனர். இளைஞர்கள் திரளாக நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். தேர்தல் காலமாக இருந்தபடியால் தமிழ் அரசியல் கட்சிகளும் அக்கறையுடன் நிவாரணச் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தன.

தற்போது அவ்விழிப்பு நிலை வெகுவாகக் குறைந்துள்ளது. அரசியல் கட்சிகள் வெறும் பார்வையாளர்களாக மாறியுள்ளன. சுகாரதாரப் பிரிவு சோர்வடைந்துள்ளது.  பொது அமைப்புக்கள் நிவாரணப் பணிகளில் ஈடுபடுவதாககத் தெரியவில்லை. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மட்டும் சில நிவாரணப்பணிகளை மேற்கொள்கின்றது. 

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2021-06-13#page-10

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54