தமிழக கடல் வழியாக கனடா செல்ல முன்ற 27 இலங்கையர்கள் கைது

Published By: Digital Desk 3

12 Jun, 2021 | 10:30 PM
image

கடல் வழியாக தமிழகத்திற்கு ஊடுருவி வெளிநாடுளுக்கு  தப்பிச் செல்ல முயன்ற 27 இலங்கையர்கள் நேற்று வெள்ளிக்கிழமை  மாலை  கைது செய்யப்பட்டுள்ள நிலையில்  க்யூ பிரிவு பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

இலங்கையில் தற்போது கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதனால் அந் நாட்டு மக்கள் வெளிநாடுகளுக்குச் சென்று மருத்துவம் பார்பதற்கும், தங்களது உறவினர்கள்  இலண்டன், கனடா, சுவிட்சர்லாந்து, உள்ளிட்ட நாடுகளில் தங்கி இருப்பதால் அவர்களுடன் சேர்ந்து வாழ  வெளி நாடுகளுக்கு தப்பிக்க முயற்சி மேற்கொண்டு  வருகின்றனர்.

"கொரோனா" தடுப்பு நடவடிக்கை காரணமாக  இலங்கை அரசு விமான போக்குவரத்தை இரத்துச் செய்ததுடன் விமான நிலையங்கள்  மூடப்பட்டுள்ளது. 

இதனால் அந் நாட்டு மக்கள்  வெளி நாடுகளுக்கு செல்ல முடியாத சூழ் நிலை நிலவி வருகிறது.

இந்நிலையில் இலங்கைக்கு அருகே தமிழ் நாடு உள்ளதால் கடல் வழியாக தமிழகம் வந்து தமிழகத்தில் இருந்து வெளி நாடுகளுக்கு தப்பி செல்ல திட்டமிட்டு கடந்த 27ஆம் திகதி இலங்கை புத்தளம் மாவட்டம் சிலாபதுறையிலிருந்து 24 ஆண்கள் , இரண்டு பெண்கள் ஒரு குழந்தை என மொத்தமாக 27 பேர்  படகு மூலம் கடல் வழியாக சட்ட விரோதமான முறையில் தூத்துக்குடி வந்தடைந்தனர்.  

தூத்துக்குடி வந்த 27 பேரும் மதுரையில் தங்கி அங்கிருந்து கேரளா வழியாக கனடா செல்ல திட்டமிட்டிருந்தனர்.

இது குறித்து க்யூ பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து ராமநாதபுரம் மற்றும் மதுரை க்யூ பிரிவு பொலிசார் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 27 பேரையும் மதுரையில் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 27 பேரும் கடவுச் சீட்டு இல்லாமல் சட்ட விரோதமாக தமிழகத்திற்குள் நுழைந்ததாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47