சிறுமி ஒருவரை துஸ்பிரயோகம் செய்து அதை கமராவில் பதிவு செய்து வைத்திருந்த 5 சிறுவர்களை ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவம் ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குற்பட்ட டிக்கோயா தரவளை பகுதியில் இடம்பெற்றுள்ளது

13 வயதுடைய பாடசாலை செல்லும் சிறுமியை 13, 14 வயதுடைய சிறுவர்கள் துஸ்பிரயோகம் செய்து அதை கமராவில் பதிவு செய்து வைத்துள்ளனர்.

சிறுமியின் பெற்றோர்களினால் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்துள்ளதை தொடர்ந்து, நேற்று இரவு குறித்த சிறுவர்கள் 5 பேரையும் பொலிஸார் கைது செய்துள்ளதுடன் கமராவையும் மீட்டுள்ளனர்.

குறித்த சிறுமியை டிக்கோயா கிளங்கன் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சந்தேக நபர்களை ஹட்டன் மாவட்ட நீதிமன்றில் ஆஜபடுத்தவுள்ளதாகவும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

(க.கிஷாந்தன்)