களிமண் தரை காளையை வீழ்த்திய ஜோகோவிக் ; கிராண்ட்ஸ்லாம் இறுதியில் அடிவைக்கும் சிட்சிபாஸ்

Published By: Digital Desk 2

12 Jun, 2021 | 05:26 PM
image

எம்.எம்.சில்‍வெஸ்டர்

கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் போட்டியின்  அரை இறுதிப் போட்டியில் களிமண் தரை காளை என வர்ணிக்கப்படும் ஸ்பெய்னின் ரபாயல் நடாலை உலகின் முதல் நிலை வீரரான  சேர்பியாவின் நொவாக் ஜோகோவிக் வென்று  இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். 

மற்றுமொரு  அரை இறுதிப் போட்டியில்  ஜேர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வேரேவை  கிரேக்கத்தின் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். இந்த வெற்றியின் மூலம்  கிராண்ட்ஸ்லாம் போட்டியொன்றின்  இறுதிப் போட்டிக்கு முதல் முறையாக அடியெடுத்து வைத்தார்  ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ்.

பிரான்ஸின் பாரிஸ் நகரில்  125 ஆவது பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதன் ஆடவர்களுக்கான ஒற்றையர் போட்டி  அரை இறுதிப்போட்டிகள் நேற்றிரவு நடைபெற்றன.

களி மண் தரையில் விளையாடப்படும் பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் போட்டியில் 13 தடவைகள் சம்பியன் பட்டத்தை வென்று சாதித்துள்ளார் நடால். இந்நிலையில் நடாலை எதிர்கொண்ட உலகின் முதல் நிலை வீரரான  சேர்பியாவின் நொவாக் ஜோகோவிக் முதல் செட்டில் 3க்கு 6 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியடைந்தார்.

எனினும், இரண்டாவது செட்டை 6க்கு 3 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றி அசத்தினார். இதையடுத்து மிகவும் விறுவிறுப்பாக சென்ற மூன்றாவது செட் ட்ரை பிரேக்கர் (சமநிலை முறிப்பு) வரை சென்றது. இந்த செட்டை 7க்கு 5 (7/4)  என்ற கணக்கில் கைப்பற்றி மூன்றாவது செட்டையும்  வென்று முன்னிலை பெற்றார்  ஜோகோவிக்.

ரபாயல் நடால், போட்டியில் நிலைத்து நிற்க வேண்டுமாயின் நான்காவது செட்டை வெல்வது  அவசியமாகும். எனினும், இந்த செட்டிலிலும் நடால் 6க்கு 4 என்ற கணக்கில் கோட்டைவிட அவரின் சம்பியன் கனவு பறிபோனது. இதன்படி ஜோகோவிக் முதல் செட்டில் தோல்வியடைந்திருந்தாலும், அடுத்த மூன்று செட்களிலும் 6க்கு 3 , 7க்கு 5 (7/4) , 6க்கு 4  என்ற கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

இதேவேளை, இரண்டாவது அரையிறுதியில் ஜேர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வேரேவ்வை எதிர்கொண்ட கிரேக்கத்தின் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் முதலிரண்டு செட்களையும் 6க்கு 3, 6க்கு3 என்ற  செட் கணக்கில் வென்றார். எனினும், அடுத்த இரண்டு செட்களையும் 6க்கு 4 ,6க்கு4 என்ற செட் கணக்கில் கைப்பற்றி அசத்தினார் ஜேர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வேரேவ்.

இந்நிலையில், வெற்றியாளரை தீர்மானிக்கும் ஐந்தாவதும் கடைசியுமான செட்டில் சிட்சிபாஸ்  6க்கு 3 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று கிராண்ட்ஸ்லாம் போட்டியொன்றின்  இறுதிப் போட்டிக்கு முதல் முறையாக அடியெடுத்து வைத்தார்.

சேர்பியாவின் நொவாக் ஜோகோவிக் மற்றும் கிரேக்கத்தின் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் ஆகியோருக்கிடையிலான 125 ஆவது பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் போட்டியின் ஆடவர்களுக்கான ஒற்றையர் இறுதிப் போட்டி நாளையதினம் (13) இலங்கை நேரப்படி மாலை 6.30 மணிக்கு ஆரம்பமாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35