பிரான்ஸ் ஜனாதிபதியின் கன்னத்தில் அறைந்தவருக்கு சிறை

Published By: Digital Desk 2

12 Jun, 2021 | 05:25 PM
image

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன் கடந்த சில தினங்களுக்கு முன்பு நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள டெய்ன் எல் ஹெர்மிடேஜ் நகரில் உள்ள ஒரு பாடசாலையை  ஆய்வு செய்வதற்காக சென்றிருந்தார்.

அப்போது‌‌ தன்னை வரவேற்க பாடசாலைக்கு வெளியே காத்திருந்த பொதுமக்களை சந்தித்து கை குலுக்க சென்றபோது,

கூட்டத்தில் இருந்த ஒரு நபர் ஒருவர் திடீரென மெக்ரோன் கன்னத்தில் அறைந்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து மெக்ரோனை கன்னத்தில் அறைந்த டேமியன் தாரெல் என்கிற இளைஞரையும், இந்த சம்பவத்தை தனது செல்போனில் படம் பிடித்த மற்றொரு நபரையும் பொலிசார் கைது செய்தனர்.

 இதேவேளை இளைஞர் தனது கன்னத்தில் அறைந்த விடயத்தைப் பெரிதுபடுத்த விரும்பவில்லை எனக்கூறிய‌ மெக்ரோன் தனிப்பட்ட முறையில் அந்த நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதில்லை என ‌ கூறியிருந்தார்.

இந்நிலையில், ஜனாதிபதி மெக்ரோனை கன்னத்தில் அறைந்தது தொடர்பாக டேமியன் தாரெலுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஜனாதிபதியை கன்னத்தில் அறைந்ததை ஒப்புக்கொண்ட டேமியன் தாரெல், எல்லோரும் தன்னை கவனிக்க வேண்டும் என்கிற நோக்கில் இதை செய்ததாக கூறினார்.

அதனைத் தொடர்ந்து அவருக்கு 18 மாதங்கள் சிறை தண்டனை விதித்த நீதிபதிகள், அதில்  4 மாதங்கள் சிறையில் இருக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47