பருத்தித்துறை கடற்பகுதியில் வைத்து 50 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவரை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

கேரள கஞ்சாவினை கொண்டு கடத்திச் செல்ல பயன்படுத்திய படகொன்றையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை மேலதிக நடவடிக்கைகளுக்காக  காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.