தமிழில் அறிமுகமாகும் புதிய டிஜிட்டல் தளம்

Published By: Digital Desk 2

12 Jun, 2021 | 11:49 AM
image

தமிழில் சோனி லிவ் என்ற பெயரில் புதிய டிஜிட்டல் தளம் அறிமுகமாகவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. 

கொரோனா காலகட்டத்தில் பட மாளிகைகள் மூடப்பட்டிருப்பதால் டிஜிட்டல் தளங்கள் அறிமுகமாகின. தமிழைப் பொருத்தவரை நெட்பிளிக்ஸ் மற்றும் அமேசான் டிஜிட்டல் தளங்கள் புதிதாக அறிமுகமாகி ஏராளமான வாடிக்கையாளர்களை இணைத்துக் கொண்டிருக்கிறது. 

சன் நெக்ஸ்ட் மற்றும் ஜீ5 போன்ற டிஜிட்டல் தளங்களும் தமிழில் அறிமுகமாகி ரசிகர்களுக்கு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை சுவராசியமான அம்சங்களுடன் வழங்கி வருகிறது. இந்நிலையில் ‘சோனி லிவ்’ என்ற பெயரில் புதிய டிஜிட்டல் தளம் தமிழில் அறிமுகமாகிறது. 

ஜூன் மாதம் 25 ஆம் திகதியன்று அறிமுகமாகும் இந்த புதிய டிஜிட்டல் தளத்தில் முதல் திரைப்படமாக பல விருதுகளை வென்ற 'தேன்' என்ற தமிழ் திரைப்படம் திரையிடப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிப்பில் 'காக்கா முட்டை' மணிகண்டன் இயக்கிய 'கடைசி விவசாயி' என்ற திரைப்படமும், 'துருவங்கள் பதினாறு' என்ற படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தயாரான 'நரகாசுரன்' என்ற திரைப்படமும் வெளியாகிறது.

தற்போதைய சூழலில் பட மாளிகைகள் திறப்பதற்கும், ரசிகர்கள் கொரோனா பயமின்றி வருவதும் சாத்தியமில்லாததால் புதிதாக அறிமுகமாகும் டிஜிட்டல் தளத்திற்கு வரவேற்பு கிடைக்கும் என திரையுலகினர் தெரிவிக்கிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35