தமிழக கடல் வழியாக கனடா செல்ல முன்ற 27 இலங்கையர்கள்  கைது 

12 Jun, 2021 | 07:36 AM
image

கடல் வழியாக தமிழகத்திற்குள் ஊடுருவி வெளிநாடுளுக்கு  தப்பிச் செல்ல முயன்ற 27 இலங்கையர்கள் இந்திய பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் இருந்து கடல் வழியாக தமிழகம் சென்று தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு தப்பி செல்ல திட்டமிட்டு கடந்த 27 ஆம் திகதி இலங்கை புத்தளம் மாவட்டம் சிலாபத்துறையிலிருந்து 24 ஆண்கள் இரண்டு பெண்கள் ஒரு குழந்தை என மொத்தமாக 27 பேர்   கடல்வழியாக சட்டவிரோதமான முறையில் தூத்துக்குடி சென்றடைந்துள்ளனர்.  

தூத்துக்குடிக்கு சென்ற  27 பேரும் மதுரையில் தங்கி அங்கிருந்து கேரளா வழியாக கனடா செல்ல திட்டமிட்டிருந்தனர்.

இது குறித்து இந்திய பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து ராமநாதபுரம் மற்றும் மதுரை க்யூ பிரிவு பொலிஸார் இன்று 27 பேரையும் மதுரையில் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

கைதுசெய்யப்பட்ட 27 பேருக்கு கடவுச்சீட்டு இல்லாமல் சட்டவிரோதமாக தமிழகத்திற்குள் நுழைந்ததாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணைக்கு பின்னர் 27 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி  புழல் சிறையில் அடைக்க திட்டமிட்டுள்ளனர்.

இதனிடையே இலங்கையில் இருந்து கனடா செல்ல மங்களூர் சென்ற 34  இலங்கையர்கள் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21