உணவு பொதியை மிரட்டி பறித்ததாக பொலிஸாருக்கு எதிராக முறைப்பாடு

Published By: Digital Desk 3

11 Jun, 2021 | 11:04 AM
image

உணவு விநியோகம் செய்ய சென்ற ஊழியரை மறித்து அவரிடமிருந்த இரண்டு உணவு பொதிகளை நேற்றைய தினம் இரவு  சுன்னாகம் பொலிஸார் மிரட்டி கொள்ளையிட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்திலேயே முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

மருதனார் மடம் சந்திக்கு அருகில் சீருடையுடன் , பொலிஸ் வாகனத்தில் நின்றிருந்த சுன்னாகம் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த பொலிசாரே இந்த உணவு கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர் என குற்றம் சாட்டப்படுகிறது. 

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 

சாவகச்சேரி பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் ஒருவர் உணவு பெற்றுக்கொள்ள தொலைபேசி ஊடாக பதிவு (ஓடர்) செய்துள்ளார். அவருக்கான உணவினை விநியோகம் செய்வதற்காக குறித்த உணவாக ஊழியர் சென்ற போது , மருதனார் மடம் சந்திக்கு அருகில் குறித்த ஊழியரை வழிமறித்த சீருடை அணிந்த பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் அவரிடம் இருந்த  இரண்டு உணவு பொதிகளை அவரை மிரட்டி கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் ஊழியரினால் , உணவக உரிமையாளருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து , அவர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு தொலைபேசி ஊடாக முறைப்பாடு செய்துள்ளார். 

தனது முறைப்பாட்டுக்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில் தான் இது குறித்து உயர் பொலிஸ் அதிகாரிகளிடமும் முறையிடுவேன் எனவும் தெரிவித்துள்ளார். 

இதேவேளை குறித்த உணவாக உரிமையாளர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தொலைபேசி ஊடாக முறைப்பாடு செய்யும் தொலைபேசி உரையாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளின் 5 நாட்களின் வருமானம்...

2024-04-16 11:20:58