இலங்கையினை இலக்குவைத்துள்ள அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பு

Published By: Raam

29 Aug, 2016 | 07:39 AM
image

ஐ.எஸ். பயங்கரவாத அச்சுறுத்தலும் அவர்களின் நகர்வுகளும் இலங்கையில் உள்ளதாக சர்வதேச புலனாய்வுகள் தொடர்ச்சியாக எச்சரித்துவரும் நிலையில் தற்போது இலங்கை  இந்தியா ஆகிய நாடுகளை அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பு இலக்குவைத்துள்ளதாக புதிய தகவல்களை இந்திய புலனாய்வு வெளியிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன . தென் இந்தியா மற்றும் இலங்கையில் அல் கொய்தா  தீவிரவாதிகள் இளைஞர்களை தமது இயக்கத்தில் இணைத்துக் கொள்ள முயற்சிப்பதாகவும் அல் கொய்தா இயக்கம் தனது பிரச்சார நடவடிக்கைகளை தமிழ், மலையாளம் போன்ற பிராந்திய மொழிகளில் பிரசுரிக்க  நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவின் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றில் இந்த செய்தி வெ ளிவந்துள்ள நிலையில் இலங்கையின் ஆங்கிலப்பத்திரிகைகள்  இந்த செய்திகளை பிரசுரித்துள்ளன. 

ஐ.எஸ்   பயங்கரவாத நகர்வுகளும் அவர்களது  தளமாக இலங்கையை பயன்படுத்தி வருவதாகவும், இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அவர்களது ஆதரவு  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதேபோல் வடக்கில் இருந்து அவர்கள் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்கு இலகுவாக பயணிக்க முடிகின்றது என்ற தகவலையும் இந்திய பாதுகாப்பு தரப்பு அண்மையில் வெளியிட்டிருந்தது. 

 இந்தியாவில் இருந்து பலர்  ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் இணைந்துள்ளதையும் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இவ்வாறு ஐ.எஸ் அமைப்பில் இணைந்தவர்கள் இலங்கைக்கு வந்து இலங்கையில் இருந்து சென்றதாகவே தெரிவிக்கப்படுகின்றது.  

இந்நிலையில் ஐ. எஸ்.  தீவிரவாதிகளினால் ஆசிய வலயங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் நகர்வுகளைப்போலவே  அல் கொய்தாவும் தமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக கூறப்படுகின்றது. அந்த வகையில் அல் கொய்தா இயக்கம் தனது பிரச்சார நடவடிக்கைகளை தமிழ், மலையாளம் போன்ற பிராந்திய மொழிகளில் பிரசூரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த அமைப்பின் காணொளிகள் , செய்திகள் போன்றவற்றை பிராந்திய மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்ய தமது இயக்கத்து உறுப்பினர்களையே  கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  அதேபோல் சமூக ஊடக வலையமைப்புக்களின் ஊடாகவும் பிரச்சாரம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஆகவே ஆசிய நாடுகளில் குறிப்பாக இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் இஸ்லாமிய பயங்கரவாத செயற்பாடுகள் பலபடையும் வாய்ப்புகள் அதிகரித்து வருவதாக இந்திய புலனாய்வு தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன. இதே நிலையில் இலங்கையில் இருந்து நாற்பத்து ஐந்து நபர்கள் கடந்த காலத்தில் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பில் இணைந்துகொண்டதாகவும் இந்தியாவில் இருந்து முப்பதுக்கும் அதிகமான  பயங்கரவாத அமைப்பில் இணைந்துகொண்டதாகவும் இலங்கை மற்றும் இந்திய புலனாய்வு அறிக்கைகள் சுட்டிக் காட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:05:57
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38