கொவிட் தொற்றால் 8 நாட்களான குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு

Published By: Vishnu

10 Jun, 2021 | 03:37 PM
image

கொவிட்-19 தொற்றால் மிகவும் இளம் வயது உயிரிழப்பு சம்பவம் ஒன்று கம்பளை பகுதியில் பதிவாகியுள்ளது.

அதன்படி கொரோனா தொற்றுக்குள்ளான எட்டே நாட்களான ஆண்  குழந்தையொன்று கம்பளை, புஸ்ஸல்லாவ பகுதியில் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் உறுதிபடுத்தியுள்ளது.

கடந்த மே 25 ஆம் திகதி பிறந்த குழந்தை கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் வீட்டிற்கு வந்தவுடன் வாந்தியெடுத்தது.

அதன் பின்னர் மீண்டும் குழந்தை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் குழந்தை கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளது கண்டறியப்பட்டது.

குழந்தை சிகிச்சை பெற்று வந்த நிலையில் கம்பளை ஆதார வைத்தியசாலையில் உயிரிழந்து விட்டதாக சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

மேலும் மரணத்திற்கான காரணம் கொவிட் நிமோனியா என அடையாளம் காணப்பட்டுள்ளது.

பெற்றோரிடமிருந்து குழந்தைக்கு வைரஸ் பாதித்திருக்கலாம் என்று வைத்தியசாலை வைத்தியர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் 8 ஆம் திகதி கொவிட்-19 காரணமாக 20 நாள் குழந்தை உயிரிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08