மூன்று பேர் கைதுடன் சட்டவிரோத மதுபானம் எட்டு வறள் கோடா கைப்பற்றல்

Published By: Digital Desk 2

10 Jun, 2021 | 11:44 AM
image

திருகோணமலை - வரோதய நகர் துவரங்காட்டு பகுதியில் சட்ட விரோதமான முறையில்  சாராயம் காய்ச்ச முயன்ற 3 பேரையும் அதற்குப் பயன்படுத்தும் (கசிப்பு காய்ச்ச தேவையான) 8 பரள் கோடாவையும் திருகோணமலை மாவட்ட மது வரித்திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் தங்களுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சுற்றிவளைப்பினை மேற்கொண்ட போது நேற்று (09) கைதுசெய்ததாக மாவட்ட மது வரித்திணைக்கள பொறுப்பதிகாரி ஜே.எஸ்.பி.அத்தநாயக்க தெரிவித்தார்.

கைதுசெய்யப்பட்ட மூவரும் வரோதய நகர் பகுதியை சேர்ந்த 25 வயது தொடக்கம் 33 வயதுக்குட்பட்ட  குடும்பஸ்தர்கள் எனவும் தெரியவருகிறது.

இதன்போது 6 ஆயிரம் மில்லி லீற்றர் கோடா மற்றும் 7500 மில்லி லீற்றர் கசிப்பு என்பனவும் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட மூவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் மது வரித்திணைக்களத்தினர் தெரிவித்தனர்.

குறித்த சுற்றிவளைப்பில் மது வரித்திணைக்கள பரிசோதகர் பீ.காந்தீபன், சாஜன் எஸ்.ஜனானந்தா,கோப்ரல் சமன்த பண்டார, காவலாளர் ருவான் சமிந்த உள்ளிட்டவர்கள் அடங்குவர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08