பிரெஞ் ஓபன்; அரையிறுதி ஆட்டத்தில் நடால் - ஜோகோவிச்

Published By: Vishnu

10 Jun, 2021 | 05:14 PM
image

பிரெஞ்சு ஓபன் காலிறுதி ஆட்டத்தில் உலக நம்பவர் வன் சம்பியனான நோவக் ஜோகோவிச், மேட்டியோ பெரெட்டினியை தோற்கடித்து அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

அரையிறுதி ஆட்டத்தில் ஜோகோவிச் ரஃபேல் நடாலை எதிர்கொள்வார்.

கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

இதில் புதன்கிழமை நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவுன் காலிறுதி ஆட்டம் ஒன்றில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் மற்றும் இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினி ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர்.

இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 6-3 6-2 6-7 (5-7) 7-5 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த மற்றோர் கால் இறுதி ஆட்த்தில் 13 முறை சாம்பியனான ஸ்பெய்ன் வீரர் ரஃபேல் நடால் 6-3, 4-6, 6-4, 6-0 என்ற செட் கணக்கில் ஆர்ஜென்டீன வீரர் டியாகோ வீழ்த்தி 14 ஆவது முறையாக அரையிறுதிக்கு முன்னேறினார். 

பிரெஞ்ச் ஓபனில் நடால் பதிவு செய்த 105 ஆவது வெற்றி இதுவாகும்.

இந் நிலையில் ரோலண்ட் கரோஸில் சாதனை படைக்கும் 14 ஆவது பட்டத்தை இலக்காகக் கொண்ட நடாலுடனான ஜோகோவிச் அரையிறுதி ஆட்டத்தில் மோதுவார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21