இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள்

Published By: Digital Desk 4

09 Jun, 2021 | 08:56 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் கொவிட் தொற்றுறுதி எண்ணிக்கையுடன் நாளாந்தம் உறுதி செய்யப்படும் மரணங்களின் எண்ணிக்கையும் சடுதியாக அதிகரித்துச் செல்கிறது.

அதற்கமைய நேற்று செவ்வாய்க்கிழமை 54 கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டன. 

கொரோனாவால் இன்று 5 மரணங்கள் பதிவு | Virakesari.lk

இலங்கையில் கொவிட் பரவல் ஆரம்பித்த நாள்முதல் நாளொன்றில் பதிவான மரணங்களின் அதிகூடிய எண்ணிக்கை இதுவாகும். நேற்று  இம்மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்ட போதிலும் இவை மே மாதம் 10 ஆம் திகதி ஜூன் 7 ஆம் திகதி வரை பதிவானவையாகும்.

கட்டான, உடுவெல, மாவனெல்ல, அரநாயக்க, மாளிகாவத்தை, ஏறாவூர்-2, கடவத்தை, மொரட்டுவை, அலுபோமுல்ல, வாத்துவ, வலஸ்முல்ல, கொலவேனிகம, கொழும்பு-15, ஜாஎல, வத்தளை, பத்கமுல்ல, தலாத்துஓயா, பதுளை, கிளிநொச்சி, நிக்கவரெட்டி, மரதன்கடவல, மதவாச்சி, அத்துருகிரிய, எல்பிட்டி, கரந்தெனிய, பெரியநீலாவணி, கந்தளாய், மாத்தளை, ரத்தோட்டை, ஹொரம்பல்ல, பட்டுகொட, வேயங்கொட, கண்டி, அக்குரனை, உடிஸ்பத்துவ, லுனுவத்த, தோரப்பிட்டி, மஹியங்கனை, றாகம, கொழும்பு-13, கந்தானை, அவிசாவளை, வத்துபிட்டிவல, பன்னிபிட்டி மற்றும் மாரவில ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 32 ஆண்களும் , 22 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இவர்களில் 6 பேர் வீடுகளிலும் , இருவர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் போதும் , எஞ்சிய 46 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் போதும் உயிரிழந்துள்ளனர்.

கொவிட் தொற்றுறுடன் நிமோனியா ஏற்பட்டமை மற்றும் நாட்பட்ட தொற்றா நோய்களின் தாக்கம் இவர்களது மரணத்திற்கான காரணம் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதே வேளை இன்று புதன்கிழமை 2716 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.

அதற்கமைய நாட்டில் கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 213 377 ஆக உயர்வடைந்துள்ளது. இவர்களில் ஒரு இலட்சத்து 78 259 பேர் தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளதோடு , 32 731 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21