லொறியில் உரம் கடத்திய இருவர் கைது - 53 உர மூடைகள் மீட்பு 

Published By: Digital Desk 4

09 Jun, 2021 | 07:48 PM
image

குருநாகலிலிருந்து அம்பாறைக்கு அத்தியாவசிய சேவை என்ற பேரில் அரசு மானியமாக வழங்கிய உரத்தை சட்டவிரோதமாக லொறி ஒன்றில் கடத்திச்சென்ற இருவரை காத்தான்குடி பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

மட்டக்களப்பு தாழங்குடா பகுதியில் வைத்து இன்று புதன்கிழமை (9) அதிகாலையில் கைதுசெய்துள்ளதாகவும் 53 உர மூடைகளை மீட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய சம்பவதினமான  இன்று அதிகாலை தாழங்குடா பகுதியில் இராணுவத்தினர்  வீதிச்சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டபோது அம்பாறை கல்முனை பகுதியை நோக்கி பயணித்த லொறியை நிறுத்தி சோதனையிட்டனர்.

இதன் போது அத்தியவசிய சேவை என்ற பேர்வையில்  அரசு மானியமாக வழங்கிய உரத்தை சட்டவிரோதமாக கடத்தி சென்றமை கண்டறிந்ததையடுத்து அந்த வொறி சாரதி மற்றும் நடத்துனர் உட்பட இருவரை இராணுவத்தினர் கைது செய்ததுடன் அதில் இருந்து 53 உர மூட்டைகளை  மீட்டனர்.

இதில் கைது செய்தவர்களையும் மீட்கப்பட்ட உரப்பைகள் மற்றும் லொறி என்பவற்றை  இராணுவத்தினர் காத்தான்குடி பொலிசாரிடம் ஓப்படைத்துள்ளதாகவும் இவர்களை இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிணைமுறி பத்திர உரிமையாளர்கள் குழுவுடன் இறுதிக்கட்ட...

2024-04-16 09:31:45
news-image

தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில் மீண்டும் பேச்சு...

2024-04-15 16:25:40
news-image

இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின்...

2024-04-16 09:19:55
news-image

பரந்துபட்ட கூட்டணி குறித்து சிந்திக்கிறோம் :...

2024-04-15 16:12:00
news-image

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்...

2024-04-15 17:06:59
news-image

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் :...

2024-04-15 16:09:52
news-image

மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு!

2024-04-16 08:52:36
news-image

விக்னேஸ்வரனிடம் கால அவகாசம் கோரினார் வேலன்...

2024-04-15 16:06:32
news-image

வெள்ளியன்று தமிழரசின் மத்திய குழுக்கூட்டம் : ...

2024-04-15 15:58:07
news-image

இன்றைய வானிலை

2024-04-16 06:15:57
news-image

யாழில் போதைப்பொருள் பாவனைக்காகத் திருட்டில் ஈடுபட்டவர்...

2024-04-16 01:31:08
news-image

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை இலகுபடுத்த விரைவில்...

2024-04-15 22:57:31