அக்கரபத்தனை - லோவர் கிரன்லி தோட்டத்தில் 5 வீடுகள் நேற்று நள்ளிரவு இனந்தெரியாதேரால் உடைக்கப்பட்டு வீடுகளிலிருந்த பெறுமதியான தங்க நகைகள் மற்றும் பணம் என்பன கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் அக்கரப்பத்தனை பொலிஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

இத்தோட்டத்தில் இடம்பெற்ற இரண்டு திருமண வீடுகளிலும், ஒரு பூப்பனித நீராட்டு விழா வீட்டிலும் மற்றும் அருகிலுள்ள இரண்டு வீடுகளும் உடைக்கப்பட்டே கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

இதன்போது, சம்மந்தப்பட்ட சந்தேக நபர்களின் கத்தி, குடை மற்றும் பாதணிகளை கொள்ளையார்கள் அவ்விடத்திலேயே விட்டு சென்றுள்ளனர்.

இதன்காரணமாக தோட்ட மக்கள் மத்தியில் அச்ச நிலை தோன்றியுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரப்பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Displaying 20160828_104341.jpg

Displaying 20160828_103005.jpg

(க.கிஷாந்தன்)