முதல் தடவையாக ஒரே நாளில் இலங்கையில் 50 க்கும் அதிகமான கொரோனா மரணங்கள் பதிவு !

09 Jun, 2021 | 07:00 AM
image

இலங்கையில் முதற்தடவையாக ஒரே நாளில் 50 க்கும் அதிகமான கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.

இந்நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட  54 பேர் உயிரிழந்துள்ளதாக நேற்று 8 ஆம் திகதி அரசாங்க தகவல் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டது.

இதனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மே 10 ஆம் திகதி தொடக்கம் மே 31 ஆம் திகதி வரை 15 கொவிட் மரணங்கள் பதிவாகியதாகவும் ஜூன் 02 ஆம் திகதி தொடக்கம் ஜூன் 07 ஆம் திகதி வரை 39 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் 2021 ஜூன் 08 ஆம் திகதி  கொவிட் 19 தொற்று மரணங்கள் பதிவாகவில்லையெனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி நேற்றையதினம் 54 கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டன . இந்நிலையில், இலங்கையில் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை  1,844 ஆக உயர்வடைந்துள்ளது.

மே 10 - 01 மரணம்

மே 15 - 01 மரணம்

மே 19 - 02 மரணங்கள்

மே 20 - 02 மரணங்கள்

மே 21 - 01 மரணம்

மே 22 - 02 மரணங்கள்

மே 23 - 01 மரணம்

மே 28 - 02 மரணங்கள்

மே 29 - 01 மரணம்

மே 31 - 02 மரணங்கள்

ஜூன் 02 - 08 மரணங்கள்

ஜூன் 03 - 06 மரணங்கள்

ஜூன் 04 - 07 மரணங்கள்

ஜூன் 05 - 07 மரணங்கள்

ஜூன் 06 - 07 மரணங்கள்

ஜூன் 07 - 04 மரணங்கள்

இவ்வாறு உயிரிழந்த 54 பேரில் 22 பெண்களும் 32 ஆண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட்டால் உயிரிழந்தவர்கள், கட்டான, உடுவெல, மாவனல்லை, அரநாயக்க, மாளிகாவத்தை, ஏறாவூர்-2, கடவத்தை, மொரட்டுவை, அலுபோமுல்ல, வாத ;துவ, வலஸ்முல்ல, கொலவேனிகம, கொழும்பு 15, ஜாஎல, வத்தளை, பத்கமுல்ல, தலாத்துஓயா, பதுளை, கிளிநொச்சி, நிக்கவெரட்டிய, மரதன்கடவல, மதவாச்சி, அத்துருகிரிய, எல்பிட்டிய, கரந்தெனிய, பெரியநீலாவணை, கந்தளாய், மாத்தளை, ரத்தோட்டை, ஹொரம்பல்ல, பட்டுகொட, வேயங்கொடை, கண்டி, அக்குரணை, உடிஸ்பத்துவ, லுனுவத்த, தோரப்பிட்டிய, மஹியங்கனை, றாகம, கொழும்பு 13, கந்தானை, அவிசாவளை, வத ;துபிட்டிவல, பன்னிபிட்டி, வக மற்றும் மாரவில ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

உயிரிழந்தவர்களின் வயதெல்லை

வயது 20 இற்கு கீழ் - 00

வயது 20 - 29 - 00

வயது 30 - 39 - 02

வயது 40 - 49 - 05

வயது 50 - 59 - 10

வயது 60 - 69 - 11

வயது 70 - 79 - 15

வயது 80 - 89 - 08

வயது 90 - 99 - 03

வயது 99 இற்கு மேல் - 00

 உயிரிழந்த இடங்கள்

வீட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை - 06

வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது உயிரிழந்தவர்கள் - 02

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தவர்கள் - 46

உயிரிழந்தமைக்கான காரணங்கள்

கொவிட் தொற்றுடன் கொவிட் நிமோனியா, தீவிர நாட்பட்ட சிறுநீரக நோய், பக்கவாதம், தீவிர கொவிட் நிமோனியா, நாட்பட்ட சிறுநீரக நோய், நரம்பியல் நோய், மூச்சிழுப்பு, இதய நோய் நிலைமை, உயர் குருதியழுத்தம், நீரிழிவு, மூளைக்கு ஒட்சிசன் வழங்களில் பாதிப்பு, மோசமான சுவாசக்கோளாறு, நுரையீரல் தொற்று, உயர் குருதியழுத்த இதயநோய், சுவாசத்தொகுதி செயலிழப்பு, டெஸ்லெபிடேமியா, பல உறுப்புக்கள் செயலிழந்தமை, கொவிட் மயோர்கார்டிடிஸ், குருதி நஞ்சானமையினால் ஏற்பட்ட அதிர்ச்சி, மூளைக்குழாய்களுக்கு சேதம், குருதி நஞ்சானமை, பித்தக்குழாய் அழற்சி, நியூரோ செப்சிஸ் மற்றும் நுரையீரல் வீக்கம் போன்ற நிலைமைகளே உயிரிழப்புகளுக்கு காரணங்களாக அமைந்துள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30