இலங்கையில் 3 தினங்களாக நாளாந்தம் 40 இற்கும் அதிகமான கொவிட் மரணங்கள் பதிவு

Published By: Digital Desk 4

08 Jun, 2021 | 09:37 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் கடந்த மூன்று தினங்களாக நாளாந்தம் 40 இற்கும் அதிகமான கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்படுகின்றன.

அதற்கமைய நேற்று திங்கட்கிழமை மேலும் 47 கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டன. 

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் | Virakesari.lk

இம்மரணங்கள் மே மாதம் 17 ஆம் திகதி முதல் இம்மாதம் 6 ஆம் திகதி வரை பதிவானவையாகும்.

எல்பிட்டிய, வத்துகஹமுல்ல, தங்கொட்டுவ, மாரவில, வலப்பனை, தெடிகம, வத்தளை, மாத்தறை, ஹட்டன், கலகெதர, வெல்லம்பிட்டி, ஊரகஹ, ஹொரணை, கோனபொல வடக்கு, பரகஸ்தொட்ட, கோனபொல, தெஹிவளை, கொழும்பு 9, தலவாக்கலை, நுவரெலியா, திருகோணமலை, அலவ்வ, நீர்கொழும்பு, காலி, களுத்துறை, தர்கா நகர், அங்கொடை, நாத்தாண்டியா, வலஹப்பிட்டி, ஹபருகல, மொரந்துட்டுவ, மாஹோ, பொல்கஹாவெல, இப்பாகமுவ, கண்டி, புலத்சிங்கள, அக்குரணை, தெஹியத்தகண்டி, பூகொடை, தொம்பே மற்றும் வேயங்கொடை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

இவர்களில் 26 ஆண்களும் , 21 பெண்களும் உள்ளடங்குகின்றனர். குறித்த 47 மரணங்களில் 9 மரணங்கள் வீட்டிலேயே பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதற்கமைய நாட்டில் பதிவான மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 1789 ஆகும்.

இதேவேளை இன்று செவ்வாய்கிழமை 2,637 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.

அதற்கமைய இதுவரையில் நாட்டில் 210, 616 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இவர்களில் 176 045 தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதோடு , 32 268 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21