லிட்ராே கேஸ் நிறுவனம் சட்டத்துக்கு முரணாக செயற்பட்டிருந்தால் வழக்கு தாெடுக்கும் பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கின்றேன் - பந்துல குணவர்த்தன

Published By: Digital Desk 3

08 Jun, 2021 | 04:00 PM
image

(ஆர்.யசி, எம்,ஆர்.எம்.வசீம்)

லிட்ராே நிறுவனம் நுகர்வோர் அதிகாரசபையின் சட்டத்துக்கு எதிராக செயற்பட்டிருந்தால், அதற்கு எதிராக வழக்கு தாெடுக்கும் பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கின்றேன் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று நிதி முகாமைத்துவ பொறுப்பு திருத்த சட்டமூலம் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் கபீர் ஹாசிம் உரையாற்றும்போது, நுகர்வோர் அதிகாரசபையின் அனுமதியில்லாமல் லிட்ராே நிறுவனம் 18லீட்டர் கேஸ் சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகித்து நுகர்வோருக்கு நட்டத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.

இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரசபையின் தலைவர் தெரிவித்தும் அரசாங்கம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கின்றது. 18 லீட்டர் கேஸ் சிலிண்டரின் நிறை 9 கிலாே கிரேமாகும். இதன் மூலம் விலை அதிகரிப்பும் ஏற்பட்டுள்ளது. நுகர்வோர் அதிகார சபையின் சட்டத்துக்கு அமைய இதனை செய்ய முடியாது.

அத்துடன் இந்தவகையான லிட்ராே கேஸ் சிலிண்டர் கடந்த இரண்டு மாதங்களாக சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. ஆனால் அரசாங்கமோ சம்பந்தப்பட்ட அமைச்சராே இந்த நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடுக்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது ஏன் என கேட்டதற்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.

அமைச்சர் பந்துல குணவர்த்தன தொடர்ந்து குறிப்பிடுகையில்,

இலங்கையில் கேஸ் சந்தை தொடர்பாக ஆராய்ந்து பார்ப்பதற்காக 5 பேர் கொண்ட அமைச்சரவை உபகுழுவொன்று அமைக்கப்பட்டிருக்கின்றது. அந்த உப குழுவின் தீர்மானத்துக்கமைய கேஸ் சம்பந்தமான நடவடிக்கைகளை மேற்கொள்வோம். அதன் பின்னர் தற்போது சந்தையில் இருக்கும் 18லீட்டர் அடங்கிய செல்கேஸை சந்தையில் இருந்து அகற்றுவது தொடர்பில் தீர்மானிப்போம்.

அத்துடன் நுகர்வோர் அதிகாரசபை சட்டத்துக்கு எதிராக எந்த நிறுவனம் செயற்பட்டாலும் அதற்கு எதிராக நாங்கள் நடவடிக்கை எடுப்போம். அந்தவகையில், லிட்ராே கேஸ் நிறுவனம் நுகர்வோர் அதிகாரசபையின் சட்டத்துக்கு எதிராக செயற்பட்டிருந்தால், அந்த நிறுவனத்துக்கு எதிராக வழக்குதொடுக்கும் பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கின்றேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53