கவிஞரும் ஆசிரியருமான அஹ்னாப் ஜசீமை விடுதலை செய்யுமாறு மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்கள் வலியுறுத்தல்

Published By: Digital Desk 4

08 Jun, 2021 | 08:16 PM
image

(நா.தனுஜா)

பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் கீழ் ஒருவருடத்திற்கும் அதிகமான காலம் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் கவிஞரும் ஆசிரியருமான அஹ்னாப் ஜசீமை உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியிருக்கும் மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தூதுவர்கள், இலங்கை அரசாங்கம் மேலும் தாமதிக்காமல் பயங்கரவாத்தடைச்சட்டத்தை மீளாய்வு செய்யவேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார்கள்.

இளம் கவிஞர் அஹ்னாப் ஜஸீம் கைது, உடனடி அவதானம் செலுத்துமாறு கோரிக்கை ~  Jaffna Muslim

இதுகுறித்து மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தூதுவர்கள் 9 பேர் இணைந்து வெளியிட்டிருக்கும் அறிக்கையிலேயே மேற்கண்டவாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

இலங்கையைச் சேர்ந்த கவிஞரும் ஆசிரியருமான அஹ்னாப் ஜசீம் தன்னிச்சையாகத் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் சம்பவத்தினால் நாம் பெரிதும் விசனமடைந்திருக்கிறோம்.

அவர் கடந்த 2020 ஆம் ஆண்டு மேமாதம் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டார். 

அவர் ஒருவருடகாலமாகத் தன்னிச்சையாகத் தடுத்துவைக்கப்பட்டதன் பின்னரும்கூட, இன்னமும் அவருக்கெதிராகக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படவில்லை.

எனவே ஜசீமை உடனடியாக விடுதலை செய்யுமாறு ஏனைய பல்வேறு மனித உரிமை அமைப்புக்களுடன் ஒன்றிணைந்து நாங்களும் வலியுறுத்துகின்றோம்.

இல்லாவிட்டால், அவர்மீதான குற்றச்சாட்டுக்களைத் தெளிவுபடுத்தி, மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச நியமங்களுக்கு அமைவாக உரிய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு வலியுறுத்துகின்றோம்.

அதேவேளை மேலும் தாமதிக்காமல் பயங்கரவாதத்தடைச்சட்டம் தொடர்பில் மீளாய்வு செய்யுமாறு இலங்கை அரசாங்கத்திடம் கோருகின்றோம்.

அதுமாத்திரமன்றி தீவிரவாத செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் எந்தவொரு சட்டங்கள் இயற்றப்பட்டாலும், அவை மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச நியமங்களுக்கு அமைவானதாகக் காணப்படவேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38