புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலையை மீள ஆரம்பிக்கும் நடவடிக்கைக்கு மக்கள் கடும் எதிர்ப்பு

Published By: Digital Desk 3

08 Jun, 2021 | 12:18 PM
image

புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலையை மீள ஆரம்பிக்கும் நடவடிக்கைக்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு, ஆடைத்தொழிற்சாலையை திறக்கவேண்டாம் எனக்கோரி புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் வர்த்தக சங்கத்தால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 17 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்தில் கொரோனா கொத்தணி உருவாகியதை தொடர்ந்து பயணத்தடை விதிக்கப்பட்டு மாவட்டத்தில் இரண்டு பிரதேசங்களை சேர்ந்த 11 கிராமசேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் நேற்று காலை தனிமைப்படுத்தப்பட்ட கிராமங்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி அறிவித்துள்ளார்.

இந்நிலையில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் இனம் காணப்பட்ட புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 9 கிராமங்களும், கரைதுறைப்பற்று பிரதேசத்தில் இரண்டு கிராமங்களும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

இருந்தும் நாட்டில் பயணத்தடை தொடர்ந்து வரும் நிலையில் வீதிகளில் படையினர்,பொலிசார் மக்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையிலும் பயணத்திற்கான அனுமதியினை பரிசோதிக்கும் நடவடிக்கையிலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

இதேவேளை புதுக்குடியிருப்பில் இயங்கிவந்த ஆடைத்தொழில்சாலை ஊடான கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதை தொடர்ந்து ஆடைத்தொழில்சாலை மூடப்பட்டுள்ள நிலையில் மீண்டும் நேற்று இயங்கவுள்ளதாக பணியாளர்களுக்கு நிர்வாகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கு பலரும்  எதிர்ப்பினை வெளிப்படுத்தி வந்துள்ளார்கள்.

இந்நிலையில் நேற்று அதிகாலை குறித்த ஆடைத்தொழில்சாலை நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்க சென்றவர்களை பொலிசார் விரட்டியடித்துள்ளதுடன் 10 பேரை கைது செய்துள்ளார்கள்.

புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் வீதியில் மக்கள் எதிர்ப்பினை கட்டுப்படுத்துவதற்காக அதிகளவான பொலிசார் குவிக்கப்பட்டு வீதிச்சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில்  அதிகாலை வேளை குறித்த பகுதிக்கு சென்ற புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உப தவிசாளர் க.ஜெனமேயந் உள்ளிட்ட கிராம அபிவிருத்தி சங்கத்தின் நிர்வாகிகள் 06 பெண்கள் என 10 பேரை புதுக்குடியிருப்பு பொலிசார் கைது செய்துள்ளார்கள்.

இவர்கள் மீது கொவிட் 19 சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளின் பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்

இந்நிலையில் உப தவிசாளர் பொது மக்கள் கைதிற்கு புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உறுப்பினர்கள் கடும் கண்டனத்தினை வெளியிட்டுள்ளார்கள்.

இதேவேளை கொவிட் பரவல் உள்ள புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் நிலமைகளை கட்டுக்குள் கொண்டுவரும் வரை ஆடைத்தொழில் சாலையினை இயங்கவிடவேண்டாம் என புதுக்குடியிப்பு வணிகர் சங்கத்தினால் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக வணிகர் சங்கத்தலைவர் நவநீதன் தெரிவித்துள்ளார்.

புதுக்குடியிருப்பில் வணிக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆடைத்தொழில்சாலையினை எவ்வாறு இயங்கவிடுவது என்ற கேள்வி பலர் மத்தியில் எழுந்துள்ளது இது இவ்வாறு இயங்குமாக இருந்தால் மேலும் பல கொரோனா தொற்றாளர்கள் உருவாக வாய்ப்புள்ளது என்றும் பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளார்கள்.

நாளுக்கு நாள் முல்லைத்தீவு மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில் குறித்த ஆடைத்தொழில்சாலையினை மீளவும் இயக்குவதற்கான அனுமதியினை புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் வழங்கியுள்ளார்கள்.

கொவிட் 19 தொற்றில் இருந்து குணமமைந்த அல்லது தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட அல்லது பி.சி.ஆர் பரிசோதனையில் தொற்று அறியப்படாதவர்களை கொண்டு தொழில்சாலையினை இயக்கவும் என்றும் மேலும் பல சுகாதார விதிமுறைகள் அடங்கிய கடிதம் ஆடைத்தொழில்சாலை நிர்வாகத்திடம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30