நூற்றுக்கு 17 வீத சமூக வலைத்தளங்களுக்கு உரிமையாளர்கள் இல்லை: சட்ட நடவடிக்கையை தவிர வேறு வழியுமில்லை..!

Published By: J.G.Stephan

08 Jun, 2021 | 11:35 AM
image

(எம்.மனோசித்ரா)
இலங்கையில் நூற்றுக்கு 17 வீதமான சமூகவலைத்தள கணக்குகள் உரிமையாளர்கள் அற்றவையாகவே காணப்படுகின்றன. வெவ்வேறு நிகழ்ச்சி நிரல்களை செயற்படுத்தும் நோக்கில் வக்கிரமாக செயற்படும் இவ்வாறான சில சமூக ஊடகங்களால் பிரதான ஊடகங்களும் சவாலுக்கு முகங்கொடுக்கின்றன. எனவே தான் இவை தொடர்பில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்தது என்று அமைச்சரவை பேச்சாளர் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் , புலானாய்வு பிரிவினரால் சமூக வலைத்தளங்கள் கண்காணிப்படவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்த  விடயம் தொடர்பில் வினவிய போதே அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில் ,

சமூக வலைத்தளங்கள் தொடர்பான தீர்மானம் கடந்த 3 வாரங்களுக்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்தின் ஊடாக எடுக்கப்பட்டதாகும். அதில் குறிப்பிடப்பட்டுள்ளமைக்கமைய இலங்கையில் நூற்றுக்கு 17 வீதமான சமூக வலைத்தள கணக்குகள்  உரிமையாளர்கள்  அற்றவையாகவே காணப்படுகின்றன. இவை ஏதேனும் வகையில் நாட்டுக்கும் மக்களுக்கும் தேசிய ஒற்றுமைக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய வகையில் இயங்குவதால் அவை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று உலக நாடுகள் பலவும் இவ்வாறான நடவடிக்கைகளை எடுத்துள்ளன. குறிப்பாக இந்தியா , அவுஸ்திரேலியா மற்றும் 5 நட்சத்திர ஜனநாயக நாடுகளில் இதுபோன்ற சட்டமூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறான சமூக வலைத்தள கணக்குகள் உண்மையான செய்திகளை மக்களுக்கு வழங்கும் பொறுப்புள்ள ஊடகங்களுக்கும் பாரிய சவாலாகவுள்ளன.

வெவ்வேறு நிகழ்ச்சி நிரல்களை செயற்படுத்தும் நோக்கில் வக்கிரமாக செயற்படும்  சில சமூக ஊடகங்களால் பிரதான ஊடகங்களின் சரியான வழிகாட்டல்கள் கூட கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன. எனவே பிரதான ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் இந்த தீர்மானம் குறித்து மகிழ்ச்சியடைய வேண்டும். இது தொடர்பில் சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர் நீதி அமைச்சு மற்றும் ஊடக அமைச்சு இணைந்து சமர்ப்பித்த கூட்டு அமைச்சரவை பத்திரத்திற்கு ஏற்ப தற்போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:20:29
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54