சுங்கத் தீர்வை இல்­லாமல் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு வாக­னங்­களை இறக்­கு­மதி செய்யும் பொருட்டு கடன் வழங்க நட­வ­டிக்கை எடுக்­கும்­படி அர­சாங்கம் இல ங்கை வங்­கிக்கு ஆலோ­சனை வழங்­கி­யுள்­ள­தாக தெரி­ய­வந்­துள்­ளது.

இது தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

இந்த ஆலோ­ச­னை­யின்­படி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்ள வாகன அனு­மதிப் பத்­தி­ரத்தின் பெறு­ம­தி­யான 6,25000 அமெ­ரிக்க டொலர்­க­ளுக்­கான வங்கிக் கடனை அவர்கள் ெபற்றுக் கொள்ள முடியும். இதன்­படி பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரொ­ரு­வ­ருக்கு 93 இலட்சம் ரூபா கட­னாக வழங்­கப்­படும். பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் 225 பேருக்கும் வாக­னங்­களைக் கொள்­வ­னவு செய்­வ­தற்கு சுமார் 200 கோடி ரூபாவை இலங்கை வங்கி கட­னாக வழங்கும்.

பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு கடனை திருப்பிச் செலுத்த வரு­டாந்தம் 13 வீத வட்­டி­யுடன் ஏழு வருட கால அவ­காசம் வழங்­கப்­பட்­டுள்­ளது. பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரொ­ரு­வரின் பதவிக் காலம் ஐந்து வரு­டங்­க­ளாகும். ஏற்­க­னவே பதவிக் காலத்தில் ஒரு வருட காலம் பூர்த்­தி­யா­கி­யுள்­ளது. நான்கு வருட காலமே எஞ்­சி­யுள்­ளது. எப்­ப­டி­யி­ருந்தும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் இந்த பத­வி­கா­லத்தின் பின்­னரும் இந்த கடனைச் செலுத்த மூன்று வருட காலம் வழங்­கப்­பட்­டுள்­ளது.

இந்த வாகன கடனை ஒரு வருட காலத் தில் மீளச் செலுத்த வட்­டி­யில்­லாமல் மாதாந்த ஒரு இலட்சம் ரூபா­வுக்கு அதி­க­மாக செலுத்த வேண்டும். பாரா­ளுமன்ற உறுப்­பி­ன­ரொ­ரு­வ­ருக்கு மாதாந்தம் சகல கொடுப்­ப­ன­வு­க­ளுடன் சுமார் ஒரு இலட் சம் ரூபா­வ­ரையே கிடைக்கும்.

பொது மக்கள் கடன் பெறும்போது அந் தக் கடனை மீளச் செலுத்த கடன் பெறும்

நப­ருக்கு போதிய வரு­மானம் கிடைக்கின் ­றதா என அங்கு ஆராயப்படும் வருமான த்தில் 40 சத­வீதம் மாதாந்தம் கடன் செலு த்த வேண்­டி­யி­ருந்தால் கடன் வழங்கப்பட மாட்டாது. ஆனால், பாராளுமன்ற உறுப்பி னர்களுக்கு வங்கி இந்த நடைமுறையைப் பின்பற்றுவதில்லை என்பது குறித்து விமர் சனங்கள் எழுந்துள்ளன.