விண்வெளிக்கு செல்கிறார் ஜெப் பெசோஸ்

08 Jun, 2021 | 06:38 PM
image

எதிர்வரும்  ஜூலை மாதம் 20 ஆம் திகதி புளூ ஓர்ஜின் நிறுவன தலைவர்  ஜெப் பெசோஸ் விண்வெளிக்கு பறக்க திட்டமிட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவைச்  சேர்ந்த 55 வயதான  ஜெப் பெசோஸ் கடந்த 1994 ஆம் ஆண்டில், அமசோன் என்ற, ஓன்லைன்' வர்த்தக நிறுவனத்தை ஆரம்பித்து  வெற்றிகரமாக நடத்தி , உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்தார்.

இவர் சிறுவயதில் விண்வெளிப் பயணம் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 2000 ஆம் ஆண்டு “ப்ளு ஓர்ஜின்” என்ற விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தையும் ஆரம்பித்தார்.

2015 ஆம் ஆண்டு ப்ளூ ஓர்ஜின் நிறுவனம் நியூ ஷெப்பர்ட் என்ற ரொக்கெட்டை வெற்றிக்கரமாக விண்வெளிக்குச்  செலுத்தியது.

இது  எதிர்வரும் ஜூலை மாதம் 20 ஆம் திகதி விண்ணுக்கு பறக்க உள்ளதாகவும் இதில் புளூ ஓர்ஜின் நிறுவன தலைவர்  ஜெப் பெசோஸ் ரொ க்கெட் மூலம், விண்வெளிக்கு பறக்க திட்டமிட்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக தனது டுவிட்டர், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக ஊடகங்களில்  ஜெப் பெசோஸ் கூறுகையில்,

ப்ளு ஓர்ஜின் நிறுவனம் 2017 ஆம் ஆண்டு சோதனைக்காக மனிதர்களை ரொக்கெட்டில் அனுப்ப திட்டமிட்டுள்ளது.

இதையடுத்து எதிர்வரும் ஜூலை மாதம் 20 ஆம் திகதி , எனது சகோதரர் மார்க்குடன் விண்வெளிக்கு பறக்க உள்ளேன்.

எங்களுடன் மேலும் ஒருவர்பயணிக்கலாம், அந்த இருகைக்கான ஏலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  இதன் மூலம் விண்வெளிக்கு பயணிக்க வேண்டும் என்ற எனது சிறுவயது கனவு நிறைவேறப்போகிறது என்றார்.

இந்த ஏலம்  எதிர்வரும் 12 ஆம் திகதி நிறைவு பெறுகின்றது. இதில் மூன்றாவது இருக்கைக்கான ஏலம் தொடங்கியதுமே 143 நாடுகளில் இருந்து 6000 கும் மேற்பட்டோர் ஏலம் கேட்டனர். 

அதில் அதிக பட்சமாக ஒருவர் 2.8 மில்லியன் டொலர் அதாவது இலங்கை மதிப்பில் சுமார் 55 கோடியே 30 இலட்சம் ரூபா வரை ஏலம் கோரியதாக தெரியவந்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52