ரணில் பாராளுமன்றம் வருவது ஐக்கிய மக்கள் சக்திக்கு பாதிப்பை ஏற்படுத்துமா..?

Published By: J.G.Stephan

08 Jun, 2021 | 09:57 AM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)
ஐக்கிய மக்கள் சக்திக்கும் ஆதரவு வழங்கும் கட்சிகளுக்குமிடையில் முரண்பாடுகள்  ஏற்பட்டுள்ளதாக சமூக ஊடக வலையமைப்புகளில் வெளியிடப்படும் செய்திகளை வன்மையாக கண்டிப்பதுடன் ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்கால வெற்றிக்காக தொடர்ந்து பாடுபடுவதென்ற பிரேரணை ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற குழுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற குழுக்கூட்டம் பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றுள்ளது. இதில் ஐக்கிய மக்கள் சக்திக்கும் ஆதரவு வழங்கும் கட்சிகளுக்குமிடையில் முரண்பாடுகள்  ஏற்பட்டுள்ளதாக சமூக ஊடக வலையமைப்புகளில் வெளியிடப்படும் செய்திகள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது. 

இதன்போது இத்தகைய போலியான ஊடக பிரசாரத்தை வன்மையாக கண்டித்துள்ளதுடன் ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்கால வெற்றிகளுக்காக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மீது முழு நம்பிக்கையையும் தெரிவித்து பிரேரணை ஒன்றை ஏகமனதாக நிறைவேற்றியுள்ளனர்.

எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல, ரவூப் ஹக்கீம், சம்பிக ரணவக்க, மனோ கணேசன் ஆகியோரால் சமர்ப்பிக்கப்பட்ட இந்தப்  பிரேரணையை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ரஞ்சித் மத்தும பண்டார, ராஜித்த சேனாரத்ன,அசோக அபேசிங்க ஆகியோர் ஆமோதித்ததோடு அனைத்து உறுப்பினர்களும் ஒருமனதாக இதை ஏற்றுக் கொண்டதாகவும் ஐக்கிய மக்கள் சக்தி ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்படுள்ளது. 

அத்துடன் ஐக்கிய மக்கள் சக்திக்குள் பிரச்சினை, அதன் ஆதரவு கட்சிகளுடன் முரண்பாடு இருப்பதுபோன்ற போலியான செய்திகளை பரப்புவதன் பின்னால் மக்களால் நிராகரிக்கப்படும் அரசாங்கத்தையும், நிராகரிக்கப்படும் அரசாங்கத்தை பாதுகாக்க முயற்சிக்கும் டீல் அரசியல்வாதிகள் செயற்படுகின்றனர். குறிப்பாக கடந்த அரசாங்க காலத்தில் மஹிந்த ராஜபக்ஷ்வுடன் டீல் வைத்துக்கொண்டிருந்தவர்களே இருப்பதாக இதன்போது சுட்டிக்காட்டப்படுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு அரசாங்கத்துக்கு பெரும் சவாலை ஏற்படுத்தி வருகின்றது. இதனை பிளவுபடுத்தும் திட்டத்திலேயே ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியல்  உறுப்பினராக ரணில் விக்ரமசிங்கவை பாராளுமன்றத்துக்கு வருமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ் அழுத்தம் கொடுத்திருக்கின்றார். ரணில் விக்ரமசிங்கவின் மனைவி மைத்திரி விக்ரமசிங்கவை சுகம் விசாரிக்க சென்றிருந்த வேளையே மஹிந்த ராஜபக்ஷ் இவ்வாறு அழுத்தம் கொடுத்திருந்தார் என்ற விடயங்களும் இதன்போது தெரிவிக்கப்பட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

அத்துடன் ரணில் விக்ரமசிங்கவை பாராளுமன்றத்துக்கு அழைத்துக்கொண்டு, அவர் ஊடாக ஐக்கிய மக்கள் சக்தியை பிளவுபடுத்தும் முயற்சியை அரசாங்கம் ஆரம்பித்திருக்கின்றது. அரசாங்கத்தின் இந்த முயற்சியை தோற்கடிக்கும் நோக்கத்திலேயே  ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற குழு, ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்கால வெற்றிகளுக்காக உழைப்பதென்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மீது முழு நம்பிக்கையையும் தெரிவித்து பிரேரணை ஒன்றை ஏகமானதாக நிறைவேற்றிக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59