அனைவரும் ஒன்றுபடுங்கள் : பிரதமர் நாட்டு மக்களிடம் வேண்டுகோள் ! 

Published By: Digital Desk 4

07 Jun, 2021 | 10:08 PM
image

(இராஜதுரை ஹஷான்)

 

கொழும்பு துறைமுகத்தின் கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளாகியுள்ள  கப்பலினால் கடல் வளத்திற்கும், கடல்வாழ் உயிரினங்களுக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்பை  நட்டஈட்டால் மாத்திரம் மதிப்பிட முடியாது. இந்நெருக்கடியை சீர் செய்ய அரசாங்கம் பொறுப்புடன் செயற்படும்.

வாழ்க்கை  மற்றும் வாழ்வாதாரம்  சமுத்திரமாகும் என்பது இன்றைய நாளுக்கான  சமுத்திர தினத்தின் தொனிப்பொருளாகும். இந்து சமுத்திரத்தின் முத்து என போற்றப்படும் இலங்கை தீவின் கடல் வளத்தை பாதுகாக்க அனைவரும் ஒன்றுப்பட வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  உலக சமுத்திர தினத்தையொட்டி அறிக்கை  வெளியிட்டுள்ளார்.

 அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

 கடல் வளத்தின் முக்கியத்துவம் தொடர்பில்  உலகிற்கு எடுத்துரைக்கும் நோக்கில்  ஐக்கிய நாடுகள் சபையினால்  பிரகடனப்படுத்த 'உலக கடல் தினத்தையொட்டி  செய்தி வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

 அபிவிருத்தி,  கைத்தொழில், மற்றும் மனித செயற்பாடுகளின் காரணமாக  கடல் வளம் மாசடைந்துள்ளமை அதிகரித்துள்ளது என சூழலியலாளர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.இதன் காரணமாகவே 2008 ஆம் ஆண்டு கடல்வளத்தை பாதுகாக்கும் நோக்கில்  கடல்வள பாதுகாப்பு அதிகார சபை ஸ்தாபிக்கப்பட்டது.

கடலில் கலக்கப்படும் கழிவுகளை ஒரு  வரையறைக்குள் கொண்டு முடியாது. இதனால்  கடல் வாழ் உயிரனங்கள் மாத்திரமன்றி முழு கடல்  வளங்களும் முழுமையாக பாதிக்கப்படுகின்றன.அத்துடன்  இவ்வாறான செயற்பாடுகள் காலநிலை மாற்றத்திற்கும் ஒரு காரணியாக அமைகிறது.

 கப்பல் போக்குவரத்தினாலும், கப்பலில் ஏற்படும் விபத்துக்களினாலும் கடல் வளம் முழுமையாக பாதிக்கப்படுகிறது.  கொழும:பு துறைமுகத்தின் கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளாகியுள்ள கப்பலினால் கடல் வளத்திற்கும், கடல் வாழ் உயிரினங்களுக்கும் ஏற்பட்டுள்ள  நட்ட ஈட்டால் மாத்திரம் மதிப்பிட முடியாது.

 பிளாஸ்டிக் மற்றும் கழிவுகள் கடலில் கலப்பதை தடுக்கும் செய்ற்திட்டத்தை அரசாங்கம் முனனெடுத்துள்ளது. சமுத்தி பல்கலைக்கழக கற்றல் செயற்பாடுகள் எதிர்காலத்தில் பயனுடையதாக அமையும்.மீனவர்களின் வாழ்க்கையின் மூலாதாரமாக இருக்கும் கடல்வளத்தை பாதுகாக்க அரசாங்கம் பொறுப்புடன் செயற்படும்.

 வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரம் சமுத்திரமாகும் என்பது இவ்வருட உலக சமுத்திர தினத்தின் தொனிப்பொருளாகும். இந்து சமுத்திரத்தின் முத்து  என சான்றோரால் போற்றப்பட்ட இலங்கை தீவின் கடல் வளத்தை பாதுகாக்க அனைத்து தரப்பினரும் ஒன்றினைய வேண்டும்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19