தனியார் வங்கிகளுக்கு மத்திய வங்கி விடுத்துள்ள முக்கிய அறிவுறுத்தல்

Published By: Digital Desk 4

07 Jun, 2021 | 10:05 PM
image

(இராஜதுரை ஹஷான்)

பிரதான நிலை தனியார் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் சேவையினை பயணத்தடை  கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய முன்னெடுக்குமாறு மத்திய வங்கி அனைத்து தனியார் வங்கிகள் மற்றும் நிதி நிறுவன பிரதானிகளுக்கு விசேட சுற்றறிக்கை ஊடாக  அறிவுறுத்தியுள்ளது.

இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிவிப்பு | Virakesari.lk

நாட்டில் உள்ள முக்கிய  தனியார் வணிக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களை  ஒரு வார காலத்திற்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

இத்தீர்மானம் தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநரின் கையொப்பத்திற்கு அமைய விசேட சுற்றறிக்கை வங்கி மற்றும் நிதி நிறுவன பிரதானிகளுக்கு நேற்றைய தினமே அனுப்பி வைக்கப்பட்டது.

மத்திய வங்கி வெளியிட்டுள்ள விசேட சுற்றறிக்கைக்கு அமைய  வங்கி கிளை அல்லது  நிதி நிறுவனத்தில் குறைந்த பட்சம் 15 சேவையாளர்களை உள்ளடக்கி சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய சேவையினை முன்னெடுக் க முடியும்.

அத்தியாவசிய சேவையாக காணப்படுகின்ற  வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின்  நட்வடிக்கைகளை முன்னெடுத்து செல்வதற்கு  சந்தர்ப்பத்தை வழங்குமாறு மத்திய வங்கி  சுகாதாரபணிப்பாளர் நாயகத்திடமும், பொலிஸ் மாத அதிபரிடமும் கோரிக்கை விடுத்துள்ளது.

வங்கி மற்றும் நிதி நிறுவன சேவையில் ஈடுப்படும் சேவையாளர்கள் தங்களின் சேவை பிரதேசத்தி;ல் உள்ள பொலிஸ் நிலையத்தில்  சேவைக்கு வருகை தரல் மற்றும் வாகன போக்குவரத்து தொடர்பில் அனுமதியை பெற வேண்டும்.  இதற்கான அனுமதி பொலிஸ் நிலையத்தினால் வழங்கப்படும். எனவும்,

வங்கி மற்றும் நிதி நிறுவன சேவையாளர்கள் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு  ஒன்லைன் முறைமை ஊடாக தங்களின் சேவைகளை முன்னெடுப்பது அவசியமாகும்.. வங்கிகளில் 24 மணித்தியாலமும் ஏ.டி.எம் முறைமை ஊடாக வாடிக்கையாளர்கள் பணம் பெறும் வசதி உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும்  விசேட சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02