கொல்லப்பட்டவர்கள் அடிமட்ட ஊடகவியலாளர்களா ? - லசந்தவின் மகள் கேள்வி

Published By: Digital Desk 4

07 Jun, 2021 | 08:46 PM
image

(நா.தனுஜா)

நாட்டில் கடந்த காலங்களில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களில் பெரும்பாலானோர் அடிமட்ட (தேர்ட் கிளாஸ்) ஊடகவியலாளர்களேயாவர்.

எனவே அத்தகைய அடிமட்ட ஊடகவியலாளராக இருக்கவேண்டாம் என்று சுகாதார அமைச்சின் ஊடாகப்பேச்சாளர் வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் வெளியிட்ட கருத்து தற்போது சமூகவலைத்தளங்களில் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

லசந்தவின் மகள் 'இலங்கையை அழிக்க' முயல்கிறார்': அரசு குற்றச்சாட்டு

இந்நிலையில் அவர் உடனடியாகப் பதவிநீக்கம் செய்யப்பட வேண்டும் என்று படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அஹிம்சா விக்கிரமதுங்க வலியுறுத்தியுள்ளார்.

கடந்த வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது, ஊடகவியலாளர் ஒருவர் தடுப்பூசி தொடர்பில் கேள்வி எழுப்பிய சந்தர்ப்பத்திலேயே ஹேமந்த ஹேரத் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

'மக்களிடம் தகவல்களைக் கொண்டுபோய்ச் சேர்க்கவேண்டிய பாரிய பொறுப்பு ஊடகவியலாளர்களுக்கு இருக்கின்றது. ஆனால் இங்கு அடிமட்ட ஊடகவியலாளர்களும் (தேர்ட் கிளாஸ்) இருக்கின்றார்கள். கடந்த காலங்களில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் பெரும்பாலானோர் அத்தகைய அடிமட்ட (தேர்ட் கிளாஸ்) ஊடகவியலாளர்களேயாவர். 

எனினும் உயர்தரத்தைப் பேணுகின்ற, மதிக்கத்தக்க ஊடகவியலாளர்கள் எவ்வித இடையூறுகளையும் எதிர்கொள்வதில்லை என்று நான் குறிப்பிட மாட்டேன்' என்று ஹேமந்த ஹேரத் பேசிய காணொளி தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சுகாதார அமைச்சின் ஊடகப்பேச்சாளரின் இந்தக் கருத்துத் தொடர்பில் படுகொலை செய்யப்பட்ட, 'சண்டே லீடர்' பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அஹிம்சா விக்கிரமதுங்க அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கிறார். அப்பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

ஊடகவியலாளர் ஒருவரைப் படுகொலை செய்வதற்கு எவ்வித நியாயப்படுத்தல்களையும் கூறமுடியாது. எந்தவொரு நபரைக் கொல்வதற்கும் நியாயம் கற்பிக்கமுடியாது. என்னுடைய தந்தையைப் போன்று கொல்லப்பட்டவர்கள் தொடர்பில் கோத்தாபய ராஜபக்ஷ அரசாங்கம் மகிழ்ச்சியடைகின்றது என்பதற்கு இந்தக் கருத்தும் ஓர் உதாரணமாகும். அதேவேளை வைத்தியநிபுணர் ஹேமந்த ஹேரத் அவரது பதவியிலிருந்து உடனடியாக விலக்கப்பட வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04