பாகிஸ்தானில் பயணிகள் ரயில்கள் விபத்து : விசாரணைக்கு உத்தரவிட்டார் இம்ரான் கான்

Published By: Digital Desk 3

07 Jun, 2021 | 02:30 PM
image

பாகிஸ்தானில் பயணிகள் ரயில்கள் இரண்டும்  ஒன்றோடொன்று மோதிக் கொண்டதில் இடம் பெற்ற விபத்து குறித்து அந்நாட்டு பிரதமர் இம்ராக் கான் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் இன்று (திங்கட்கிழமை) சயித் எக்ஸ்பிரஸ், மிலத் எக்ஸ்பிரஸ் ஆகிய பயணிகள் ரயில்கள் இரண்டும் தடம் புரண்டு ஒன்றோடொன்று மோதிக் கொண்டதில் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் 36 பேர் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையிலேயே,  விபத்து குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார்.

சமீபத்தில் ஏற்பட்ட மோசமான ரயில் விபத்தாக இது கருதப்படுவதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாகிஸ்தானில் 2005 ஆம் ஆண்டு சிந்து மாகாணத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47