அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள் - நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பு

Published By: Digital Desk 4

06 Jun, 2021 | 07:41 PM
image

(இராஜதுரை ஹஷான்)

கொவிட் -19 வைரஸ் தாக்கத்தின் காரணமாக  மக்கள் பொருளாதார ரீதியில் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இவ்வாறான சூழ்நிலையில்   அத்தியாவசிய பொருட்களின் விலையினை அதிகரிக்குமாறு வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

இதற்கு நுகர்வோர் அதிகாரசபை அனுமதி வழங்க கூடாது. அத்தியாவசிய பொருட்களை நிர்ணய விலைக்கு அதிகமாக விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு எதிராக முறையான நடவடிக்கை இதுவரையில் முன்னெடுக்கப்படவில்லை என  நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பின் தலைவர் ரஞ்சித் விதானகே குற்றஞ்சாட்டினார்.

வரிக் குறைப்பின் பலன்களை மக்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் - நுகர்வோர் உரிமைகள்  பாதுகாப்புக்கான தேசிய இயக்கம் | Virakesari.lk

அத்தியாவசிய பொருட்களின் விலையினை அதிகரிக்குமாறு வியாபாரிகள்  நுகர்வோர் அதிகார சபையிடம் முன்வைத்துள்ள கோரிக்கை தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பால்மா கோழியிறைச்சி ஆகிய உணவு பொருட்களின் விலையினையும், சீமெந்து ,மற்றும் எரிவாயு ஆகியவற்றின் விலையினையும் அதிகரிக்குமாறு வியாபாரிகள் மற்றும் நிறுவனத்தினர்கள் நுகர்வோர் அதிகார சபையிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்கள்.

டொலருடன் ஒப்பிடுகையில் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி, இறக்குமதி செலவு, சர்வதேச சந்தையில் அத்தியாவசிய பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு,  இறக்குமதி மற்றும் விநியோக செலவு ஆகிய காரணிகளை முன்வைத்து  விலையேற்றத்திற்கான கோரிக்கையினை வியாபாரிகள் முன்வைத்துள்ளார்கள்.

இவர்களின் கோரிக்கை குறித்து நுகர்வோர் அதிகார சபை இதுவரை எவ்வித தீர்மானத்தையும் அறிவிக்கவில்லை.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் காரணமாக மக்கள் பொருளாதார ரீதியில் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இவ்வாறான நெருக்கடியான சூழ்நிலையில் அத்தியாவசிய பொருட்களின் விலையினை அதிகரித்தால் பொது  மக்கள் மேலும் பொருளாதார ரீதியில் பாதிக்கப்படுவார்கள். ஆகவே வியாபாரிகளின் கோரிக்கைகக்கு அனுமதி வழங்க கூடாது என நுகர்வோர் அதிகார சபைக்கு உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளோம்.

கொவிட் -19 வைரஸ் தாக்கத்தை கருத்திற் கொண்டு நாடு தழுவிய ரீதியில்  தற்போது பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அங்காடி  விற்பனை முறைமை ஊடாக அத்தியாவசிய பொருட்கள் தற்போது விநியோகிக்கப்படுகின்றன. வழமைக்கு மாறாக அதிக விலையில் வியாபாரிகள் பொருட்களையும், உணவு பொதிகளையும் விற்பனை செய்கிறார்கள்.

இவ்விடயம் குறித்து நுகர்வோர் அதிகார சபைக்கு எழுத்து மூலமாக அறிவித்தும் இதுவரையில் உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படவில்லை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41