போக்குவரத்து கட்டுப்பாடுகளிலும் அதிகரிக்கும் வாகன விபத்துக்கள்: 24 மணித்தியாலங்களில் 6 பேர் பலி

Published By: J.G.Stephan

06 Jun, 2021 | 02:42 PM
image

(செ.தேன்மொழி)
போக்குவரத்து கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் இன்றுகாலை ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலயத்திலேயே அதிகளவான வாகன விபத்துகள் பதிவாகியுள்ளன. இவ்வாறு ஆறு விபத்துகள் பதிவாகியுள்ளதுடன், அதன் காரணமாக ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக தற்போது நாடு தழுவிய ரீதியில் போக்குவரத்து கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இக்காலப்பகுதியில் இன்று காலை ஆறுமணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலயத்திற்குள் நாடளாவிய ரீதியில் ஆறு வாகன விபத்துகள் பதிவாகியுள்ளதுடன் , அதன் காரணமாக ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.

குருணாகலை , கல்னேவ, மாவத்தகம, வட்டவல, நுவரெலியா மற்றும் யக்கலை  போன்ற பகுதிகளிலேயே இவ்வாறு வாகன விபத்துகள் பதிவாகியுள்ளதுடன் , இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த நால்வரும், முச்சக்கர வண்டி மற்றும் வேனில் பயனித்த இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளார்கள். உயிரிழந்தவர்கள் 35 - 64 ஆகிய வயதுக்கு இடைப்பட்டவர்களாவர்.

தற்போது மழையுடனான காலநிலை நிலவுவதால் , நாட்டின் சில பகுதிகளில் பல்வேறு இயற்கை அனர்த்தங்கள் பதிவாகியுள்ளன. இதன்போது பலர் உயிரிழந்துள்ளனர். இந்த விடயத்தை கவனத்திற் கொண்டு வாகன சாரதிகள் செயற்பட வேண்டும். மழை காரணமாக வீதிகள் நீர் தன்மையுடன் காணப்பட்டால் வாகனங்கள் குறைந்தளவிலான வேகத்திலேயே செல்லவேண்டும். அதனை விடுத்து அதி கூடிய வேகத்தில் செல்ல முற்பட்டால் விபத்துகள் ஏற்படுவதற்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளதென்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58