3 ஆவது முறையாகவும் மீண்டும் பிற்போடப்பட்டது

Published By: Digital Desk 2

05 Jun, 2021 | 08:25 PM
image

எம்.எம்.சில்வெஸ்டர்

நாட்டில் ஜூன் மாதம் 14 ஆம் திகதி வரை பயணக்கட்டுப்பாடுகள் விதித்துள்ளதால், எதிர்வரும் 7 ஆம் திகதியன்று கொழும்பு குதிரைப் பந்தய விளையாட்டு கட்டடத் தொகுதியில் நடைபெறவிருந்த இலங்கை கால்பந்தாட்ட சம்மேளன தேர்தல் திகதி குறிப்பிடப்படாமல்  பிற்போடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி இலங்கை கால்பந்தாட்ட சம்மேளன தேர்தல் மூன்றாவது தடவையாகவும் பிற்போடப்பட்டுள்ளது. 

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தில் பதிவு செய்யப்பட்ட 64 கால்பந்தாட்ட சம்மேளனங்களிலிருந்து 192 பேர் தேர்தலில் வாக்களிக்கவுள்ளனர்.

பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், நாட்டில் அனைத்து பாகங்களில் உள்ளவர்களை கொழும்புக்கு கொண்டுவந்து தேர்தலை நடத்துவது சிரமமான காரியம் என சுகாதார பிரிவு கால்பந்தாட்ட சம்மேளனத்துக்கு தெரிவித்துள்ளமையே தேர்தலை நடத்த முடியாமைக்கான காரணம் என இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் தெரிவிக்கிறது.

இலங்கை கால்பந்தாட்ட யாப்பின்படி இரகசிய வாக்கெடுப்பின் படியே தேர்தல் நடத்த வேண்டுமென்பதால் ‘சூம்’ தொழிநுட்ப வசதியை கையாள்வது சாத்தியமாகாது என இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் அனுர டி சில்வா தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகலடைந்த மும்பை...

2024-04-19 02:08:17
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49