இந்தியாவின் கொச்சின் விமான நிலையத்தில் வைத்து 2.6 மில்லியன் பெறமதியான தங்க நகைகள் மற்றும் தங்க கட்டிகளுடன் இலங்கை பெண்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும் நேற்று (26) கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

கைதுசெய்யப்பட்ட இருவரின் பயணப்பொதிகளிலிருந்து  842 கிராம் தங்க நகைகள் மற்றும் தங்க கட்டிகள் மீட்கப்பட்டுள்ளன.

ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் விமானசேவைக்கு சொந்தமான UL-165 விமானத்தில் இந்தியாவுக்கு பயணித்தவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.