இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்

05 Jun, 2021 | 07:54 AM
image

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 48 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, 2021 ஜூன் மாதம் 04 ஆம் திகதி நேற்றையதினம்எவ்வித கொவிட் மரணங்களும் பதிவாகவில்லையெனவும் மே மாதம் 11 ஆம் திகதி தொடக்கம் ஜூன் மாதம் 03 ஆம் திகதி வரை 48 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி இதுவரை இலங்கையில் பதிவாகியுள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 1656 ஆக அதிகரித்துள்ளது.

இறுதியாக பதிவான மரணங்களின் விபரங்கள் 

மே 11 - 01 மரணம்

மே 13 - 01 மரணம்

மே 20 - 01 மரணம்

மே 23 - 01 மரணம்

மே 24 - 02 மரணங்கள்

மே 29 - 02 மரணங்கள்

மே 30 - 01 மரணம்

மே 31 - 16 மரணங்கள்

ஜூன் 01 - 12 மரணங்கள்

ஜூன் 02 - 09 மரணங்கள்

ஜூன் 03 - 02 மரணங்கள்

இவ்வாறு இறுதியாக உயிரிழந்த 48 பேரில் 23 பெண்களும் 25 ஆண்களுகளும் அடங்குவர்.

இறுதியாக உயிரிழந்த 48 பேரும் பொகவந்தலாவை, மஸ்கெலியா, முதுங்கொடை, கொழும்பு-13, கொலன்னாவை, களுத்துறை வடக்கு, மத்துகம, கிரிமெட்டிய, கண்டி, நாவான, ரதாவன, இராஜகிரிய, கொழும்பு-10, திஹாரிய, அத்தனகல்ல, வெலிஓயா, றாகம, யட்டவத்த, ஜல்தர, நுவரெலியா, கல்பாத்த, துன்மோதர, பஸ்யாலை, கல்கமுவ, மெகொடவேவ, கல்னேவ, ஹொருவில, அவிசாவளை, புப்புரஸ்ஸ, தோரயாய, மெல்சிரிபுர, அவ்லேகம, குருநாகல், இந்துல்கொடகந்த, நாரம்மல, பொல்கஹவல, மெரகொல்லாகம, அலவ்வ, பண்டாரகொஸ்வத்த, பதுள்ள, ஹங்குரன்கெத்த, பயாகல, பேருவளை மற்றும் கிரிமெட்டியாவ பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

• அவர்களின் வயதெல்லை

வயது 20 இற்கு கீழ்; - 00

வயது 20 - 29 - 00

வயது 30 - 39 - 01

வயது 40 - 49 - 01

வயது 50 - 59 - 09

வயது 60 - 69 - 16

வயது 70 - 79 - 07

வயது 80 - 89 - 12

வயது 90 - 99 - 02

வயது 99 இற்கு மேல் - 00

• உயிரிழந்த இடங்கள்

வீட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை - 18

வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது உயிரிழந்தவர்கள் - 01

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தவர்கள் - 29

• உயிரிழந்தமைக்கான காரணங்கள்

கொவிட் தொற்றுடன் தீவிர கொவிட் 19 நிமோனியா, ஈரல் நோய், இதயம் செயலிழந்தமை, கொவிட் 19 நுரையீரல் தொற்று, இதய நோய், நுரையீரல் அழற்சி, உயர் குருதியழுத்தம், மூச்சிழுப்பு, சுவாசத்தொகுதி செயலிழப்பு, பல தொகுதி நோய், கட்டுபாடற்ற நீரிழிவு, சுவாசக்கோளாறு, மோசமாக சிறுநீரகம் செயலிழந்தமை, புற்றுநோய், குருதி நஞ்சானமை மற்றும் பல உறுப்புக்கள் செயலிழந்தமை போன்ற நிலைமைகள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40