அம்பலாங்கொட - மாதம்பே பகுதியில் ரயிலின் முன் பாய்ந்து நபரொருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

குறித்த சம்பவம் இன்று (27) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் 66 வயதான நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நீண்ட காலமாக சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததால், மன உளைச்சலினால் குறித்த நபர் தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.