டெங்கு நோய் அச்சுறுத்தல் பாரிய நெருக்கடியை ஏற்படுத்தும் - தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு எச்சரிக்கை !

Published By: Digital Desk 4

04 Jun, 2021 | 05:10 PM
image

(எம்.மனோசித்ரா)

தென்மேற்கு பருவ பெயர்ச்சி மழை ஆரம்பித்துள்ளதால் நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக டெங்கு நோய் அதிகரிக்கக் கூடிய அபாயம் காணப்படுகிறது.

கொவிட் பரவலுக்கு மத்தியில் டெங்கு நோய் அச்சுறுத்தலும் ஏற்படுமாயின் அது சுகாதார தரப்பிற்கு பாரிய நெருக்கடியை ஏற்படுத்தும்.

எனவே மக்கள் தமது வீட்டு வளாகத்தில் நுளம்பு பெறுகாமல் இருக்கும் வகையில் சுற்றாடலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் அருண ஜயசேகர தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

நாட்டில் கடந்த 5 மாதங்களில் 7860 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். மே மாதத்தில் இனங்காணப்பட்ட 859 நோயாளர்களில் மூன்றில் ஒரு பங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்திலேயே இனங்காணப்பட்டுள்ளனர்.

எனவே கொழும்பு உள்ளிட்ட ஏனைய சகல மாவட்டங்களிலுள்ள மக்கள் தமது வீட்டு வளாகத்தில் நுளம்பு பெறுகாமல் இருக்கும் வகையில் சுற்றாடலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

கொவிட் பரவலுக்கு மத்தியில் டெங்கு அச்சுறுத்தலும் அதிகரிக்குமாயின் அது சுகாதார தரப்பினருக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

இவ்விரண்டும் வைரஸ் நோய் என்பதால் ஆரம்பகட்ட அறிகுகளும் ஒரே மாதிரியானவையாகவே உள்ளன. எனவே அறிகுறிகள் தென்படுபவர்கள் என்ன நோய்க்கு உள்ளாகியுள்ளனர் என்பதை துரிதமாகக் கூற முடியாது.

எனவே நோய் அறிகுறிகள் காணப்படுபவர்கள் தாமதிக்காது வைத்தியசாலைகளுக்கு செல்ல வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07