இலங்கைக்கு நிலக்கரி இறக்குமதி  செய்வது தொடர்பிலான கேள்வி பத்திரம் வழங்குவது தொடர்பில் அமைச்சரவை இறுதி தீர்மானம் எடுக்குமென மின்சக்தி மற்றும் சக்திவலு பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.

ஊடக சந்திப்பொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

நிலக்கரி இறக்குமதி தொடர்பில் பல்வேறு வேறுபட்ட கருத்துக்கள் வெளிவருகின்றன.

எது எவ்வாறாயினும் நிலக்கரி இறக்குமதி அமைச்சரவையின் இறுதி தீர்மானத்தின்படி மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.