தனது மனைவியை சி.ஐ.டி.யின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் கடத்தியதாக பொலிஸ் பொறுப்பதிகாரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு..!

Published By: J.G.Stephan

03 Jun, 2021 | 06:59 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

சி.ஐ.டி. எனப்படும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின்  உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் தனது மனைவியை கடத்திச் சென்றுள்ளதாக கம்பஹா மாவட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஒருவர் கிரிபத்கொடை பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார். இது தொடர்பில் கிரிபத்கொடை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 கடந்த முதலாம் திகதி இரவு 9.45 மணியளவில், கொழும்பு கண்டி பிரதான வீதியில் குறித்த சி.ஐ.டி. உதவி பொலிஸ் அத்தியட்சகர் தனது உத்தியோகபூர்வ வாகனத்தில், தனது மனைவியுடன் பயணிப்பதை, குறித்த பொலிஸ் பொறுப்பதிகாரி அவதானித்துள்ளதுடன், அந்த வாகனத்தை பின்தொடர்ந்து சென்றுள்ளார். இதன்போது அந்த வாகனம் களனி - தலுகம பகுதி வர்த்தகர் ஒருவரின் வீட்டுக்குள் சென்றுள்ளது. 

அங்கு பொலிஸ் பொறுப்பதிகாரியும் செல்லவே, இரு தரப்புக்கும் அங்கு வைத்து வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து, குறித்த பொலிஸ் பொறுப்பதிகாரி கிரிபத்கொடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாகவும் , உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.  சம்பவம் தொடர்பில் கிரிபத்கொடை பொலிசார்  விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01