இராஜினாமா செய்த அரச அதிகாரிகளை  மீண்டும் பதவிக்கு நியமிக்க முடியாது : சபையில் பிரதமர் திட்டவட்டம்  

Published By: MD.Lucias

27 Aug, 2016 | 09:03 AM
image

தமது பதவிகளை இராஜினாமா செய்த அரசாங்க அதிகாரிகளை மீண்டும் அந்தப் பதவிகளில் நியமிக்க முடியாதென பிரதமர்  ரணில் விக்ரமசிங்க சபையில் திட்டவட்டமாக அறிவித்தார்.

முன்னதாக திறைசேரி பணிப்பாளர் சபையில் அங்கம் வகிக்கும் பல்வேறு அரசாங்க நிறுவனங்களின் பிரதிநிதிகள் தமது இராஜினாமாக கடிதங்களை கையளித்திருந்த நிலையில் அவ்வாறு  கடிதங்களை கையளித்தவர்களை மீண்டும் சேவையில் இணைக்க வேண்டாமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டமை தொடர்பில்   ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஒன்றிணைந்த எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன சபையின் கவனத்திற்கு  கொண்டுவந்திருந்தார். 

பொலிஸ் நிதி மோசடிப் பிரிவின் கெடுபிடிகள் அதிகரித்திருப்பதாலேயே அந்த அதிகாரிகள் தமது இராஜினாமாக் கடிதங்களை கையளித்துள்ளனர். இவர்களை சேவையிலிருந்து நீக்குவது சாதாரணமானதொரு விடயமமில்லையெனவும்   அவர்  சுட்டிக்காட்டியிருந்தார்.

இதற்குப் பதிலளித்து உரையாற்றுகையிலேயே  பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

அவர் மேலும்  தெரிவிக்கையில்  

 திறைசேரியில் உள்ள அதிகாரிகள் சிலர் பதவியிலிருந்து விலகியுள்ளனர். அவர்கள் விலகுவதற்கான காரணத்தைக் கூறியுள்ளனர். அவ்வாறானவர்களை மீண்டும் நியமிப்பதில் அர்த்தமில்லை என்றும் கூறினார்.

அவர்கள் பதவியிலிருந்த காலத்தில் ஏற்பட்ட நஷ்டங்கள் எதனையும் நிறுத்தமுடியாதுபோனது. அவ்வாறானவர்களுடன் என்ன கதைக்கவுள்ளது? இவர்கள் சேவையில் தொடர்வதால் பாரிய மாற்றம் எதுவும் ஏற்பட்டுவிடப்போவதில்லை. நிபுணத்துவம் மிக்கவர்களை நியமிப்பதற்கு சட்டமொன்றை கொண்டுவர முடியும்.

எவராவது பிழை செய்திருந்தால் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். கடந்த அரசாங்கத்தின் காலத்தில் சுற்றுலா சபையில் இருந்த அதிகாரிகள் சபைக்கான நலன்புரி நிதியை அரசியலுக்குப் பயன்படுத்த அனுமதித்துள்ளனர்.  ஊவாமாகாணசபைத் தேர்லுக்கு சுற்றுலா சபையின் நலன்புரி நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு அதிகாரம் இல்லை. அரசியல்கட்சிகள் தமது ஆதரவாளர்களிடமிருந்து பணத்தை சேகரித்து அரசியல் செய்யமுடியும். எனினும் பொது மக்களின் பணத்தைகொண்டு அதிகாரிகள் அரசியல் செய்ய முடியாது. அரச பணம் வீணாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. 

இந்த அதிகாரிகள் இராஜினாமா செய்துள்ளனர். இவர்களை மீண்டும் பணியில் அமர்த்தவேண்டிய தேவை இல்லை. புதிதாக நியமிக்க பலர் இருக்கின்றனர். இவர்கள் இருந்தார்கள் என்று பாரிய மாற்றங்கள் எதுவும் ஏற்பட்டுவிடப்போவதில்லை என்றார். 

இதன்போது குறுக்கிட்ட தினேஷ் குணவர்த்தன எம்பி கூறுகையில்

அரசாங்க திணைக்களம் மற்றும் கூட்டுத்தாபனத்தின் சார்பில் திறைசேரிக்கு நியமிக்கப்படுபவர்கள் தொடர்ந்து பணியாற்ற முடியாது எனக் கூறியுள்ளனர். அவ்வாறானவர்களை பதவி விலக்குவதாக அரசாங்கம் தீர்மானம் எடுப்பது பொருத்தமானதாக இருக்காது என்றார் 

அதன்பின்னர் தனது கருத் தொடர்ந்து முன்வைத்த பிரதமர்  மோசடியாகப் பயன்படுத்துமாறு யார் உத்தரவிட்டார்கள் எனக் கூறினால் அதிகாரிகளுக்குப் பிரச்சினை வந்திருக்காது. தேநேரம்  இது அரசாங்கத்தின் நடவடிக்கை இல்லை. பொலிஸ் நிதி மோசடிப் பிரிவினருக்கு  மஜிஸ்திரேட் நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு அமைவான நடவடிக்கையாகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44