இலங்கை கடல்வாழ் உயிரினங்களுக்காக பிரார்த்திக்கின்றேன் -  எரிக் சொல்ஹெய்ம்

03 Jun, 2021 | 02:16 PM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

இலங்கையின் கடற்கரைகள், கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் இயற்கை குறித்து பிரார்த்தனை செய்கிறேன்.

பேர்ள் கப்பல் விபத்தினால் உள்நாட்டு கடற்கரைக்கு  ஏற்பட்டுள்ள பாதிப்பின் பாரதூரதன்மை குறித்து அறியமுடிகின்றது என உலக மூலவள நிறுவனத்தின் தலைமை ஆலோசகரும் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம்  தெரிவித்தார்.

பேர்ள் கப்பல் விபத்து குறித்து வீரகேசரி - செய்திப்பிரிவிற்கு பதிலளிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

கொழும்புத் துறைமுகத்திற்கு வடமேற்குப்பகுதி கடலில் எக்ஸ்பிரஸ் பேர்ள் என்ற சரக்கு கப்பலில்பாரிய தீ ஏற்பட்டது.

சுமார் ஒரு வாரக்காலம் வரை நீடித்த அந்த கப்பலின் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த போதும் அதனால் கடல்வளத்திற்கு ஏற்பட்ட ஆபத்தை சீர் செய்ய முடியாத நிலையே உள்ளது.

குறிப்பாக இராசாயண பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் மாசுப்பொருட்கள் ஏற்கனவே கடல் நீரில் கலந்து விட்டுள்ளது.  

இந்த விபத்தின் மோசமான பின்விளைவுகள் தொடர்பில் தேசிய மற்றும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எவ்வாறாயினும் இவ்வாறான இரசாயணங்கள் கடலில் கலப்பது ஆபத்தானதாகும். இலங்கை கடற்கரைக்கு பேர்ள் கப்பலினால் ஏற்பட்ட ஆபத்தான நிலைமை கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். இது பாரியதொரு ஆபத்தாகவே காண முடிகிறது.

இலங்கையின் அழகிய கடற்கரைகளுக்கு கப்பலிலிருந்து  பிளாஸ்டிக் மாசுபாடு பரவியுள்ளது. இது பாரியதொரு ஆபத்தை ஏற்படுத்தும் என நம்புகின்றோம்.

இலங்கையின் கடற்கரைகள், கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் இயற்கை குறித்து பிரார்த்தனை செய்வதாக உலக மூலவள நிறுவனத்தின் தலைமை ஆலோசகரும் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19