அரச மருத்துவ அதிகாரிகள் சங்க நிறைவேற்று குழு உறுப்பினர்கள் நேற்று எதிர்கட்சித் தலைவர் இரா .சம்பந்தனை பாராளுமன்றத்தில் அவரது அலுவலகத்தில் சந்தித்தது கலந்துரையாடினர் . 

குறித்த சந்திப்பு தொடர்பில  அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் வைத்தியர் சாய் நிரஞ்சன குறிப்பிடுகையில்  ,

எதிர்கட்சித் தலைருடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையின்போது  அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வடக்கு கிழக்கு பகுதிகளில் அனைத்து மக்களுக்கும் சுகாதார சேவைகளை  சமமாக வழங்குவதற்கு  கடந்த காலங்களில்  எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பிலும் எதிர்காலத்தில் மருத்துவ சேவைகளை வட கிழக்கில் விஸ்தரிப்பதில் எமக்கு உள்ள ஆர்வத்தினையும் தெரியப்படுத்தினோம். 

வைத்தியர்கள்  அனைவருக்கும் முதல் நியமனத்தின்  போது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் அனுசரணையுடன் வழங்கப்படும் தமிழ் மொழிப் பயிற்சி தொடர்பிலும் அவருக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்திய இலங்கை பொருளாதார வர்த்தக உடன்படிக்கை தொடர்பில் அரச மருத்துவ  அதிகாரிகள் சங்கத்தின்  கரிசனை தொடர்பிலும் , பொருளாதார வர்த்தக உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திடுவதற்கு  முன்பாக சர்வதேச உடன்படிக்கைகள் தொடர்பிலான தேசியக் கொள்கை ஒன்றின் அவசியம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.  அவ்வாறான தேசியக்கொள்கை இன்றி சர்வதேச உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திடும் பொது எமது நாட்டுக்கு ஏற்படக்கூடிய  பாதகமான விளைவுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

மேலும் சர்வதேச உடன்படிக்கை தொடர்பிலான தேசியக் கொள்கையின் அவசியம் பற்றி எதிர்க் கட்சித் தலைவரும் தனது கரிசனைக் கருத்துக்களை தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் அதனை பிரதமரிடமும் , அமைச்சர் மலிக் சமரவிக்ரமவிடமும் வலியுறுத்துவதாகவும் கூறினார்.