தனியார் துறையில் பணியாற்றும் தாய்மார்களுக்கு பிரசவ விடுமுறையை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் தான் அமைச்சரையில் பேசவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். 

தற்போது, அரச துறையில் பணியாற்றும் தாய்மார்களுக்கு 6 மாதங்கள் பிரசவ விடுமுறை வழங்கப்படுவதுடன், அதன்பின்னர் சம்பளம் அற்ற விடுமுறை பெற்றுக் கொள்ளும் வசதியும் உள்ளது. 

அதன்பிரகாரம், தனியார் துறையில் பணியாற்றும் தாய்மார்களுக்கும் இந்த விடுமுறையை பெற்றுக் கொடுப்பதற்கு தான் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.