அஸ்ட்ரசெனிகா தடுப்பூசிகளைப் பெறுவதில் பெறும் நெருக்கடி: மக்கள் அச்சமடைய தேவையில்லை - சன்ன ஜயசுமன

Published By: J.G.Stephan

02 Jun, 2021 | 06:38 PM
image

(எம்.மனோசித்ரா)
இந்தியாவிடமிருந்து தற்போது அஸ்ட்ரசெனிகா தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுகிறது. எனவே பிரித்தானியா மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளிடம் இது தொடர்பில் கோரிக்கை விடுத்துள்ள போதிலும், அதற்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை. எவ்வாறிருப்பினும் அஸ்ட்ரசெனிகா தடுப்பூசிகளை முதற்கட்டமாக பெற்றுக் கொண்டவர்களுக்கு முதல் 6 மாதங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடையத் தேவையில்லை என்று இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

தடுப்பூசி பற்றாக்குறை என்பது இலங்கையில் மாத்திரமல்ல : உலகலாவிய ரீதியில் காணப்படுகிறது. எனவே தான் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் கூட உறுதியளிக்கப்பட்டவாறு எமக்கான தடுப்பூசிகளை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

12,64,000 அஸ்ட்ரசெனிகா தடுப்பூசிகளும் , 11 இலட்சம் சைனோபார்ம் தடுப்பூசிகளும் இது வரையில் முழுமையாக கிடைக்கப் பெற்றுள்ளன. சைனோபார்ம் நிறுவனத்துடன் செய்து கொள்ளப்பட்ட  ஒப்பந்தத்திற்கமைய  13 இலட்சம் தடுப்பூசிகள் பெற்றுக் கொள்ளப்படவுள்ளன. இவற்றில் முதற்கட்டமாக எதிர்வரும் 6 ஆம் திகதி ஒரு மில்லியன் தடுப்பூசிகளையும் , 9 ஆம் திகதி மேலும் ஒரு மில்லியன் தடுப்பூசிகளையும் வழங்க தயாராகவுள்ளதாக சைனோபார்ம் நிறுவனம் உறுதியளித்துள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59