எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் கடலில் மூழ்கும் நிலை: கரையோர மீன்பிடி கப்பல்களை அகற்றுமாறு திணைக்களம் அறிவிப்பு

Published By: J.G.Stephan

02 Jun, 2021 | 05:48 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)


பாணந்துறையில் இருந்து கொழும்பு ஊடாக கொச்சிகடை வரையிலான கடற்கரைக்கு அண்மித்த கரையோர மீன் பிடி தொழிலில் ஈடுபடும் அனைத்து மீனவ கப்பல்களையும் கடற்றொழில் நடவடிக்கையில் இருந்து அகற்றுமாறு கடற்றொழில் திணைக்களம் மாவட்ட உதவி பணிப்பாளர்களுக்கு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக கடற்றொழில் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் கடலில் மூழ்கிவிடும் நிலை இருந்து வருகின்றது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பிரிவு உறுதிப்படுத்தி இருக்கின்றது. இவ்வாறு கப்பல் கடலில் மூழ்கும்போது, கப்பலில் இருக்கும் எரிபொருள் உள்ளிட்ட கழிவுப்பொருட்கள் மற்றும் கொள்களன்களின் இரும்பு பாகங்கள் கடலில் மிதந்து மீனவர்களின் கப்பல்களில் மோதும் அபாயம் இருக்கின்றது.

அதன் பிரகாரம் பாணந்துறையில் இருந்து கொழும்பு ஊடாக கொச்சிகடை வரையில் கரையோர கடற்றொழிலில் ஈடுபட்டுவரும் கப்பல்களை அகற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இது தொடர்பாக அவதானமாக செயற்படுமாறு ஏனைய பிரதேசங்களில் மீன் பிடி தொழிலில் ஈடுபட்டுவரும் மீனவ சமூகங்களுக்கு அறிவுறுத்துமாறும் பணிப்பாளர் நாயகம், அனைத்து மாவட்ட உதவி பணிப்பாளர்களுக்கும் அறிவித்திருக்கின்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கட்டுநாயக்கவிலிருந்து புறப்பட்ட விமானம் மீண்டும் தரையிறக்கம்!

2024-03-19 14:13:26
news-image

ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

2024-03-19 14:18:01
news-image

அவுஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் குழு யாழ்.பல்கலைக்கு...

2024-03-19 14:04:31
news-image

பொது மக்கள் எங்கும் தீ வைக்க...

2024-03-19 13:41:34
news-image

யாழில் கல்லூரி வீதிக்கு ரயில் கடவை...

2024-03-19 12:58:21
news-image

பாதாள உலக நடவடிக்கைகளை ஒடுக்க 20...

2024-03-19 12:43:19
news-image

இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை...

2024-03-19 12:38:07
news-image

தகாத உறவினால் பிறந்த குழந்தையைக் கொன்ற...

2024-03-19 12:11:22
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-19 12:09:35
news-image

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது!

2024-03-19 11:57:01
news-image

வெடுக்குநாறிமலையில் கைதான 8 பேரும் விடுதலை...

2024-03-19 11:21:15
news-image

வெடுக்குநாறிமலை கைது விவகாரம் -நாடாளுமன்றத்தில் தமிழ்...

2024-03-19 11:11:26