யாழில் தடுப்பூசி பெற்றவர்களுக்கு எதுவிதப் பாதிப்புமில்லை!: அச்சப்படாது தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளுங்கள்

Published By: J.G.Stephan

02 Jun, 2021 | 01:50 PM
image

யாழ் மாவட்டத்தில் தடுப்பூசி பெற்றோர்  எவருக்கும் பாதிப்பு இல்லை எனவே பொதுமக்கள் அச்சப்படாது, தடுப்பூசியை பெற்று கொள்ளுங்கள் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்குடா நாட்டில் தற்போதைய தடுப்பூசி வழங்கல் நிலைமை தொடர்பில் கருத்துரைக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

யாழ் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு தடுப்பூசி  ஏற்றும் செயற் திட்டமானது கடந்த ஞாயிற்றுக்கிழமையிலிருந்து ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.

 அதனடிப்படையில் முதல் நாளில் 2,948 பேர் தடுப்பூசியை பெற்றிருந்தார்கள். இரண்டாவது நாளிலேயே 6,000 பேர் தடுப்பூசியை பெற்றிருந்தார்கள். நேற்று 13,914 ஆயிரம் பேர் தடுப்பூசியினை  பெற்றிருக்கின்றார்கள்.

இன்றும்  தொடர்ச்சியாக தடுப்பூசி வழங்கும் செயற்திட்டம்  நடைபெறுகின்றது. இன்றும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தடுப்பூசியைபெற்றுக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகின்ற பல்கலைக் கழக பணியாளர்களுக்கு தடுப்பூசியை வழங்குவதற்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. மத்திய சுகாதார அமைச்சிலிருந்து  தடுப்பூசியினை வழங்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

அந்த அறிவுறுத்தலுக்கமைய இன்று யாழ் பல்கலைக்கழகத்தில் ஒரு விசேடமான தடுப்பூசி வழங்கல் செயற்பாடு  நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இதில் 2,100 பல்கலைக் கழக பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்குரிய  ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டு நடைபெற்று வருகின்றது.

முதல் கட்டமாக 50 ஆயிரம்  தடுப்பூசி கிடைத்திருக்கின்றது. அநேகமாக இன்றுமாலை  அல்லது நாளையுடன் அந்த  ஐம்பதாயிரம்  தடுப்பூசிகளினை முற்றாக பூர்த்தி செய்யக்கூடியதாக இருக்கும்  என எதிர்பார்க்கப்படுகின்றது.

எனவே இதுவரை தடுப்பூசி போட்டவர்களில் யாருக்கும் எந்த பாதிப்பும் பதிவாகவில்லை. எனவே பொதுமக்கள் தயங்காது அச்சப்படாது, பயப்படாது, தமக்குரிய தடுப்பூசி பெற்றுக் கொள்ள முடியும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:26:20
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32