ஆப்கான் தலைநகரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு ; 10 பேர் பலி

Published By: Vishnu

02 Jun, 2021 | 01:10 PM
image

ஆப்கானிய தலைநகர் காபூபில் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்கள் குறைந்தது 10 பேரின் உயிரை காவு கொண்டதுடன், நகரத்தை இருளில் மூழ்கடித்தாக அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

செவ்வாய்க்கிழமை பிற்பகுதியில் மேற்கு காபூல் சுற்றுப்புறத்தின் தனித்தனி இடங்களில் இரண்டு குண்டுகள் வெடித்தன, அதில் குறைந்தது 10 பேர் உயிரிழந்ததுடன்,  பலர் காயமடைந்தனர் என்று அந் நாட்டு உள்துறை அமைச்சகத்தின் துணை செய்தித் தொடர்பாளர் சையத் ஹமீத் ருஷன் உறுதிபடுத்தினார்.

மூன்றாவது குண்டு வெடிப்பு வடக்கு காபூலின் ஒரு மின்சார நிலையத்தை பெரிதும் சேதப்படுத்தியது என்று அரசாங்க மின்சாரம் துறையின் செய்தித் தொடர்பாளர் சங்கர் நயாசாய் தெரிவித்தார்.

ஆரம்ப இரண்டு குண்டுவெடிப்புகள், பொது போக்குவரத்து மினி பஸ்களை குறிவைத்து மாலை வேளைகளில் மேம்படுத்தப்பட்ட வெடிபொருள் சாதனங்களால் தலைநகரின் பெரும்பாலும் ஷியைட் இனத்தவர்கள் வசிக்கும் பகுதியில் ஹசாரா பகுதியில் வெடிக்க வைக்கப்பட்டது.

குண்டுவெடிப்புக்கான பொறுப்பு உடனடியாக வெளிவரவில்லை. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47